திரையற்றது என்றால் என்ன : 



' திரை ' என்பது முதிர்வயதினால் சரீரத்தில் உண்டாகும் சுருக்கங்கள் ஆகும் . ஆவிக்குரிய ஜீவியத்தில் உண்டாகும் சுயதிருப்தியை இது காண் பிக்கிறது . சுயதிருப்தி நம்மில் உண்டாகுமேயாயின் , நம்முடைய குறைகளை நாம் கண்டுணர முடியாத வர்களாயிருப்போம் ; லவோதிக்கேயா சபையாரைப் போன்று ஆவிக்குரிய பிரகாரம் நாம் தரித்திரராய் இருப்பதை உணராதவர்களாய் , நாம் ஐசுவரிய வான்கள் . நமக்கு ஒரு குறைவுமில்லை என்று எண்ணிக்கொள்வோம் ( வெளி . 3:14 , 17 ) . 

அப்போது நம்முடைய ஆவிக்குரிய வளர்ச்சிக் குன்றிப் போகும் . எனவே நம் ஜீவியத்தில் சுயதிருப்திக்கு இடங்கொடாமல் , நாம் நம் ஆவிக்குரிய ஜீவியத்தில் வளரும்படி புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப் போல திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப் பாலின் மேல் வாஞ்சையுள்ளவர்களாயிருப்போமாக ( 1 பேதுரு 2 : 1 - 3 ) . 

பரிசுத்தத்திலிருந்து பரிசுத் தத்திற்கு நாம் கடந்து செல்ல வேண்டும் , கர்த்தருக் காக இன்னும் அதிகமாய்ப் பாடுபட வேண்டும் , அவருக்காக அதிகமாய் ஊழியங்களைச் செய்ய வேண்டும் , இன்னும் அதிகம் ஜெபிக்க வேண்டும் , வேதம் வாசிக்க வேண்டும் போன்ற வாஞ்சைகள் நாளுக்கு நாள் நம்மில் அதிகரிக்க வேண்டும் . 

ஆண்டவராகிய இயேசுவின் இரகசிய வருகை யில் எடுத்துக்கொள்ளப்படுகிறவர்களைக் குறித்து , ' யௌவன ஜனம் ' என்று கூறப்பட்டுள்ளதே ( சங் . 110 : 3 ) . நாம் அடைந்தாயிற்று . அல்லது முற்றும் தேறினவர்களானோம் என்று எண்ணாமல் , கிறிஸ்து இயேசுவினால் எதற்காக நாம் பிடிக்கப்பட்டோமோ அதைப் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய் இலக்கை நோக்கித் தொடருவோமாக !

Post a Comment

Previous Post Next Post