நம் முன் செல்லும் தேவனுடன் ஓர் ஆண்டு 






" நான் உனக்கு முன்னே போய் , கோணலானவைகளைச் செவ்வை யாக்குவேன் . ... வெண்கலக் கதவுகளை உடைத்து , இருப்புத் தாழ்ப் பாள்களை முறித்து , அந்தகாரத்தில் இருக்கிற பொக்கிஷங்களையும் , ஒளிப்பிடத்தில் இருக்கிற புதையல்களையும் உனக்குக் கொடுப்பேன் " ( ஏசாயா 45 : 2 , 4 ) . இப்புத்தாண்டில் இவ்வாக்குத்தத்தம் நம்மிடத்தில் உண்மையாய் நிறைவேறும் . நிச்சயமாகவே கர்த்தர் நமக்கு முன்னே போவார் . கோணலான சூழ்நிலைகளையும் மாறுபாடான ஜனங்களையும் நாம் சந்திக்கக் கூடும் . ஆகிலும் நாம் கர்த்தருக்குப் பின்செல்வோமாயின் அவர் அவற்றைச் அவர்களை ) செவ்வையாக்குவார் . நம்முடைய ஆவிக்குரிய முன்னேற்றத் தைத் தடுத்துநிறுத்துவதாக நம்மை அச்சுறுத்தக்கூடிய வெண்கலக் கதவுகள் , இருப்புத் தாழ்ப்பாள்கள் போன்ற அநேக தடைகள் நமக்கு எதிரிட்டு வரக் கூடும் . ஆனால் கர்த்தர் தாமே அப்படிப்பட்ட வெண்கலக் கதவுகளைச் சின்னபின்னமாக உடைத்து , இருப்புத்தாழ்ப்பாள்களை முறித்துப்போடுவார் . 


' அந்தகாரத்தில் இருக்கிற பொக்கிஷங்கள் ' - நம் பாதையில் ஆங்காங்கே சிற்சில அந்தகாரமான பகுதிகள் இருக்கக் கூடும் . ஆனால் கர்த்தர் தாமே அந்தகாரத்தில் இருக்கிற அநேக விலையேறப்பெற்ற ஆத்துமாக்களை விசேஷித்த பொக்கிஷங்களாக நமக்குத் தருவதாக இவ்வாண்டில் வாக்குப்பண்ணுகிறார் . 


' ஒளிப்பிடத்தில் இருக்கிற புதையல்கள் ' - இங்கு ' ஒளிப்பிடம் ' என்பது ' உன்னதமானவரின் மறைவில் ' நாம் தங்கியிருப்பதை அதாவது ஜெப ஜீவியமாகிய இரகசிய அறையைக் காண்பிக்கிறது ( சங் . 91 : 1 ; மத் . 6 : 6 ) . ஓர் ஆழமான ஜெபஜீவியம் உள்ளவர்களுக்கென புதையல்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன . இஸ்ரவேல் ஜனங்களைப் போல நாம் ஒரு வனாந்தரப் பிரயாணம் செய்துகொண்டிருக்கிறோம் . ஆனால் கர்த்தர் தாமே நமக்கு முன்னே போவதாக வாக்குப்பண்ணுகிறார் . “ என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும் , நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன் ” ( யாத் . 33 : 14 ) . நமக்கு இளைப்பாறுதல் தருவதற்காக அவருடைய சமுகமானது நம் முன் செல்லுகிறது . நாம் நம்முடைய நித்திய இளைப்பாறுதலை அடையும் வரை அது நம்முடனேகூடச் செல்லும் ,


கர்த்தர் ' என் சமுகம் உன்னுடன் தங்கியிருக்கும் ' என்று அல்ல , ' என் சமுகம் உன்னுடனே கூடச் செல்லும் ' என்றே கூறியிருக்கிறார் . தேவ சமுகத்திற்கு முன்னோக்கிச் செல்லும்படி நம்மை ஊக்குவிக்கும் ஓர் உந்துவிசை உண்டு . அது நம்மை முன்னேறிச் செல்லப்பண்ணும் . அது நம்மை முன்னோக்கிச் செல்லக்கூடிய தீவிரமான ஒரு கிறிஸ்தவனாக்கும் . சுவிசேஷத்திற்கும் முன்னோக்கிச் செல்லும்படி நம்மை ஏவி எழுப்பும் ஒரு வல்லமை இருக்கிறது . ' ஆகையால் , நீங்கள் புறப்பட்டுப் போய் , சகல ஜாதிகளையும் சீஷராக்குங்கள் . இதோ , சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் ' ( மத் . 28 : 19 , 20 ) . " கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார் ; ... புறப்பட்டுப் போங்கள் ” ( யாத் 14 : 14 , 15 ) . 

இப்புதிய வருடத்தில் நம் யுத்தங்கள் யாவற்றையும் கர்த்தர் தாமே நடப்பிக்கும்படி விரும்புகிறார் . ஆனால் அதற்கு ஒரு நிபந்தனை உண்டு . அது , நாம் முன்னேறிச் சென்றுகொண்டேயிருக்க வேண்டும் என்பதே . நம் வருங்காலத்தைக் கர்த்தர் தம் கரங்களில் வைத்திருப்பதால் அது ஆசீர்வதிக்கப்பட்டதாயிருக்கப்போகிறது என்பதை நாம் அறிவோம் . அவர் நிச்சயமாகவே நம்மைக் குறித்துப் பெரிய திட்டங்களை வகுத் திருக்கிறார் . இவ்வருடத்தில் நாம் கடந்து செல்ல வேண்டிய பாதையை நாம் அறியாதவர்களாயிருக்கலாம் . 

ஆனால் நமக்கு முன் செல்வது யார் என்பதை நாம் அறிவோம் . இந்த அறிவே அனைத்து மாற்றங்களையும் உண்டுபண்ணுகிறது . " கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி , மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி , உன் எலும்புகளை நிணமுள்ள தாக்குவார் ; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும் , வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய் " ( ஏசாயா 58 : 11 ) , இயேசு நம் முன்னே செல்வதால் அஞ்சிடோம் ; முற்றுமுடிய நம்மை நடத்துவார் .

Post a Comment

Previous Post Next Post