அவர் உன்னை விசாரிக்கிறவர் ! 




' சீயோனோ : கர்த்தர் என்னைக் கைவிட்டார் , ஆண்டவர் என்னை மறந்தார் என்று சொல்லுகிறாள் . ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல் , பாலுண்கிற தன் பாலகனை மறப்பாளோ ?அவர்கள் மறந்தாலும் , நான் உன்னை மறப்பதில்லை . இதோ , என் உள்ளங்கைகளில் உன்னைச் செதுக்கிவைத்திருக்கிறேன் ; உன் மதில்கள் எப்போதும் என் முன் இருக்கிறது ' ( ஏசாயா 49 : 14 - 16 -Eng . ) . 


நம்முடைய துன்பங்களிலும் தொல்லைகளிலும் நாம் எத்தனை சந்தர்ப்பங்களில் தேவன் நம்மைக் கைவிட்டுவிட்டார் என்றும் . அவர் நம்மை மறந்துவிட்டார் என்றும் நினைக்கிறோம் ! மேற்காணும் வேதபகுதி யில் , கர்த்தர் தாம் நம் மேல் எவ்வளவதிகமாகக் கரிசனையுள்ளவரா யிருக்கிறார் என்பதையும் , நம்மை எவ்வளவாய் விழிப்புடன் பாதுகாக்கி றார் என்பதையும் நமக்குக் காண்பிக்க விரும்புகிறார் . 


' ஸ்திரீயானவள் பாலுண்கிற தன் பாலகனை மறப்பாளோ ? ' - தாய்மார் வளர்ச்சியடைந்திருக்கும் தங்கள் பிள்ளைகளைச் சில சமயங்களில் மறந்துவிடுகின்றனர் . ஆனால் பாலுண்கிற ஒரு பிள்ளையை ஒரு தாய் ஒருபோதும் மறக்கமாட்டாள் . ஏனெனில் அவள் இன்றி அப்பிள்ளை உதவியற்ற ஒரு நிலையில் இருக்கிறது . ஆனால் இங்கு கர்த்தர் வெளிப் படுத்தும் ஆர்வமூட்டும் சத்தியம் யாதெனில் , அந்தத் தாய் பாலுண்கிற தன் பிள்ளையை ஒருவேளை மறந்து அதற்கு இரங்காமற்போனாலும் , அவர் நம்மை ஒருபோதும் மறந்துபோகமாட்டார் என்பதே . மேலும் , " மலைகள் விலகினாலும் , பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும் , என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும் , என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலை பெயராமலும் இருக்கும் என்று , உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லு கிறார் ” ( ஏசாயா 54 : 10 ) என்பது அவரது வாக்குத்தத்தமாயிருக்கிறது . 


தன் தாயைப் பற்றிக்கொண்டிருக்கிற ஒரு குழந்தையைப் போல அவரைப் பற்றிக்கொண்டு , அவர் மேல் நம்பிக்கையாயிருக்கிறவர்களின் மீது அவர் எவ்வளவு நினைவுள்ளவராயிருக்கிறார் ! ' இதோ , என் உள்ளங்கைகளில் உன்னைச் செதுக்கிவைத்திருக் கிறேன் ' - நம் உடலின் வேறெந்தப் பகுதியிலும் எழுதப்பட்டிருப்பதைப் போலல்லாது , நம் உள்ளங்கைகளில் எழுதப்பட்டிருப்பது நாம் எப்போதும் பார்க்கக்கூடியதாயிருக்கும் . ஒரு நபருடைய கையில் செதுக்கப்படும் பெயர் அந்நபருடைய கண்களுக்கு முன் எப்போதும் இருப்பதால் அது அவரால் மறக்கப்படக்கூடாததாய் இருப்பது போல , தம்மால் நம்மை ஒருபோதும் மறக்க முடியாது என்பதைத் தேவன் நமக்கு உறுதிப்படுத்த விரும்புகிறார் . நம் பெயர்கள் அவரது உள்ளங்கைகளில் வெறுமனே ' எழுதப்பட்டிருக்கவில்லை ' ; அவை ' செதுக்கப்பட்டிருக்கின்றன ' . நம் கரங்களில் எதையாகிலும் செதுக்கிவைப்பது என்பது மிகவும் வேதனை யளிக்கக் கூடியதாக இருக்கும் . மேலும் செதுக்கிவைக்கப்பட்ட ஒன்றினை


இலகுவாக அழித்துப்போடவும் இயலாது . ஒருவர் தனது கரத்தில் யாருடைய பெயரைச் செதுக்கி வைத்திருக்கிறாரோ அந்நபரை மிக அதிகமாய் நேசிக்கிறார் என்பது வெளிப்படை . அவ்வாறிருக்க , கர்த்தர் நம்மைத் தமது உள்ளங்கைகளில் செதுக்கிவைத்திருக்கிறாரென்றால் , அவர் நம் மேல் எவ்வளவதிகமாகப் பாசம் வைத்திருக்க வேண்டும் ! “ உன் மதில்கள் எப்போதும் என் முன் இருக்கிறது ” - தாம் நம்மைச் சுற்றிலும் அக்கினி மதிலாய் இருப்பதாகக் கர்த்தர் வாக்குப்பண்ணியிருக் கிறார் ( சக . 2 : 5 ) . 


நம்முடைய இரட்சிப்பும் , ஜெபஜீவியமும் , கர்த்தரோடு நாம் செய்திருக்கிற உடன்படிக்கைகளும் அவருக்கு முன்பாக மதில்கள் போல் இருக்கும்போது , கர்த்தர் நம்மைச் சுற்றிலும் அக்கினி மதிலா யிருந்து , யாதொரு சத்துருவும் உட்புகாதவாறு நம்மை விழிப்புடன் பாதுகாத்துக்கொண்டிருப்பார் . உன்னைச் சுற்றிலும் ஒரு அக்கினி மதில் இருக்குமாயின் , உன்னைத் தாக்கும்படி சத்துருவால் அதற்குள் பிரவேசிக்க முடியாது . அவன் அப்படிச் செய்ய முயற்சித்தால் அந்த அக்கினி அவனைப் பட்சித்துப்போடும் . ஆம் ! அருமையான தேவபிள்ளையே , நீ கர்த்தரால் நன்றாகப் பாதுகாக்கப்பட்டு , அவருடைய நல்ல பராமரிப்பின் கீழ் வைக்கப்பட்டிருக் கிறாய் . எனவே நீ உன் கவலைகளையெல்லாம் அவர் மேல் வைத்துவிடு . ' கர்த்தர் உன்னைப் பொறுப்பெடுத்திருக்கிறாரென்றால் , நீ இளைப்பாறிக் கொண்டிரு ' என்று தலைமைப் பேராயர் லெய்ட்டன் கூறுகிறார் . 


poetry :

தாய் தன் சேயை மறந்துவிட்டாலும் 

மறவேன் உன்னை என்றதாலே ஸ்தோத்திரம்

வரைந்தீரன்றோ உம் உள்ளங்கையில் 

வல்லவா எந்தன் புகலிடமே !

Post a Comment

Previous Post Next Post