மேன்மை என்றால் என்ன ?




 ' என் மேன்மையைப் பெருகப்பண்ணி , என்னை எப்பக்கத்திலும் தேற்றுவீர் ' ( சங் . 71 : 21 -Eng . ) , 


நீ இரு விதங்களில் மேன்மையடையலாம் . முதலாவதாக , சங்கீதம் 71 : 21 - இன்படி தேவன் உன் மேன்மையைப் பெருகப்பண்ணும் போது நீ உண்மையாகவே மேன்மையடைவாய் . இரண்டாவதாக , தானியேல் 8 : 4 -இல் குறிப்பிடப்பட்டுள்ள ஆட்டுக்கடாவைப் போல , நீ எப்பக்கத்திலும் முதன்மையானவனாய்த் திகழும்படி உன்னை நீயே முன்னோக்கி உந்தித்தள்ளிக்கொண்டு , உன் சொந்த சித்தம் செய்வதினாலும் , பணம் , பொருள் , மற்றும் நயவசனிப்பான வார்த்தைகளால் ஜனங்களை உன்வசப்படுத்திக்கொள்வதினாலும் நீ மேன்மையடையலாம் . 


ஆனால் , தேவன் உன் மேன்மையைப் பெருகப்பண்ணும்போது ஒரு காரியம் மிக நிச்சயமானது - எல்லா இடங்களிலும் நீ தேறுதலைக் கண்டடைவாய் ; உன்னுடைய சோதனை நேரங்களிலும் , கலக்கமான வேளைகளிலும் தேவன்தாமே உன்னைத் தேற்றுவார் . மறுபக்கத்தில் உன்னை நீயே உயர்த்த முற்படுவாயாகில் , அது உன் அழிவிற்கே வழிவகுத்துவிடும் . தானியேல் : 4 - 7 -இல் குறிப்பிடப்பட்டுள்ள ஆட்டுக்கடா மேற் கிலும் வடக்கிலும் தெற்கிலும் தன்னைத்தானே உந்தித்தள்ளிக்கொண்டு , அதன் மூலம் மேன்மையடைந்ததாக நாம் வாசிக்கிறோம் . ' அந்த ஆட்டுக்கடா மேற்கும் வடக்கும் தெற்கும் பாய்கிறதைக் கண்டேன் ; அது தன் இஷ்டப்படியே செய்து மேன்மையடைந்தது '. 


இவ்விதம் தன்னைத் தானே முன் நோக்கி உந்தித்தள்ளிக்கொண்டு அதின் மூலம் மேன்மை யடைந்த அந்த ஆட்டுக்கடாவுக்குச் சம்பவித்தது யாது ? 7 -ஆம் வசனத்தில் , ஒரு வெள்ளாட்டுக்கடா உக்கிரத்தோடே அதற்கு விரோதமாகப் பாய்ந்து அதைத் தரையிலே தள்ளி மிதித்து அழித்துப்போட்டது என நாம் வாசிக்கிறோம் . அரசியல் சம்பந்தமாகவோ , ஆவிக்குரிய பிரகாரமாகவோ அல்லது வேறெந்த விதத்திலாயினும் தலைவர்களாக வேண்டுமென்று விரும்பி அதிகாரத்தைப் பறித்துக்கொள்ள முற்படுகிற அனைவருக்கும் இது ஒரு எச்சரிப்பாகும் .


 நீ பிறரோடு போட்டியிட்டு உன்னை நீயே உந்தித் தள்ளிக்கொண்டு மேன்மையடையப் பிரயாசப்படுவதினாலும் , உன் நிர்வாகத் திறன் , செயல் திறன் , நயவசனிப்பு , பிறரைக் கவரத்தக்க மற்ற டல ஏதுக்கள் போன்றவற்றால் மாறுபாடான வழியில் ஜனங்களை உன் வசப்படுத்திக் கொள்வதினாலும் நீ மேன்மை அடையக் கூடும் . ஆனால் அதன் முடிவோ அபாயகரமானதாயிருக்கும் என்பதை நினைவிற்கொள்வாயாக . நீ கைப்பற்றிக்கொண்ட அந்த உயர்ந்த ஸ்தானத்தில் நீ ஒருபோதும் ஆறுதலையும் இளைப்பாறுதலையும் கண்டடையமாட்டாய் . மறுபக்கத்தில் தேவன் உன்னை உயர்த்தும் போது ஒருவரும் உனக்கு எதிர்த்து நிற்க முடியாது ; அத்துடன் ஒவ்வொரு சூழ்நிலையிலும் அவர்தாமே உன்னை ஆற்றித்தேற்றுவார் ; நீ ஆறுதலடைவதுடன் மற்றவர் களுக்கும் ஆறுதலாய் இருப்பாய் .


 ' உன்னுடைய திறமை உன்னை உயர்ந்த ஸ்தானத்திற்கு எடுத்துச் செல்லக் கூடும் ; ஆனால் உன் சுபாவம் மட்டுமே உன்னை அந்த ஸ்தானத்தில் நிலைகொள்ளச் செய்யும் ' , ஆனால்

Post a Comment

Previous Post Next Post