ஆரம்பமும் முடிவும் தேவனோடு !




 " ஆதியிலே தேவன் .... " ( ஆதி . 1 : 1 ) . வே


ஆரம்ப வசனத்திலும் கடைசி வசனத்திலும் தேவன் இடம்பெறுகிறார் . வேதாகமத்தின் கடைசி வார்த்தை “ ஆமென் ” என்ப தாகும் ( வெளி , 22 : 21 , தேவனின் நாமங்களுள் ஒன்று “ ஆமென் ” என்பதா கும் ( வெளி . 3 : 14 ) . ஆமென் என்ற வார்த்தைக்கு ' அது அப்படியே ' , ' அப்படியே ஆகக்கடவது ' என்று அர்த்தமாம் . நாம் நம்முடைய ஜீவியத்தைத் தேவனுடனேயே ஆரம்பித்து , தேவனுடனேயே முடிக்க வேண்டும் . அப்படியானால் இப்பூமியில் நம் ஜீவியத்தை நாம் முடிக்கும் போது தேவன் நம்மை அங்கீகரித்துப் பாராட்டும் வகையில் நம்மை நோக்கி , “ ஆமென் ” என்று சொல்லுவார் . 


பழைய ஏற்பாட்டின் கடைசி வசனம் ' சாபம் ' என்னும் வார்த்தையில் முடிவுறுகிறது ( மல் . 4 : 6 -Eng . ) . நியாயப்பிரமாணம் என்று அறியப்படுகிற பழைய ஏற்பாடானது , ஆசீர்வாதத்தில் அல்ல , சாபத்தில் முடிவுற்றது . நம் ஜீவியத்தின் முடிவு தேவனோடுகூட இருக்கவேண்டுமென்றால் , நாம் நியாயப்பிரமாணத்தினால் கட்டப்பட்டவர்களாயிராமல் அன்பினால் கட்டப் பட்டவர்களாயிருக்க வேண்டும் . 


வேதாகமம் ' தேவன் ' , ' வானம் ' என்ற வார்த்தைகளோடு ஆரம் பித்து , தேவனோடும் பரலோகத்தோடும் சம்பந்தப்பட்ட வார்த்தைகளோடு முடிவடையும்போது , ஆதியாகமம் , ' தேவன் ' , ' வானம் ' என்று ஆரம்பித்து , ' மரணம் ' , ' எகிப்திலே சவப்பெட்டி ' ஆகிய வார்த்தைகளுடன் முடிவுறு கிறது . ' யோசேப்பு மரித்தான் . எகிப்து தேசத்தில் அவனை ஒரு சவப்பெட்டி யிலே வைத்துவைத்தார்கள் ' ( ஆதி , 50 : 26 -Eng . ) , தேவன் நம்முடைய ஜீவியத்தின் முடிவில் நமக்குப் பரலோகத்தை அருளும்போது , எகிப் தாகிய இந்த உலகமோ நமக்கு மரணத்தையும் சவப்பெட்டியையுமே கொடுக்கக் கூடியதாயிருக்கிறது . 


தேவனுடைய பிள்ளையே , உன்னுடைய ஜீவியத்தைத் தேவனோடு ஆரம்பிப்பது முக்கியமானதாகும் . ஒவ்வொரு வருடத்தையும் , ஒவ்வொரு மாதத்தையும் , ஒவ்வொரு நாளையும் , ஒவ்வொரு வேலையையும் , நீ செய்யத் துவங்குகிற ஒவ்வொரு காரியத்தையும் நீ தேவனோடு ஆரம்பிப்பது இன்றியமையாததாகும் . அவற்றை மகிமையாய் முடிப்பது அதாவது அவற்றைத் தேவனோடுகூட முடிப்பது அதைப் பார்க்கிலும் அதிக இன்றியமையாததாகும் .

Post a Comment

Previous Post Next Post