உனக்கு வழிநடத்துதல் வேண்டுமா ? 




" கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் எவனோ அவனுக்குத் தாம் தெரிந்துகொள்ளும் வழியைப் போதிப்பார் ” ( சங் . 25 : 12 ) .


 ' நீ பரிசுத்த ஆவிக்குள் ஜீவிக்கும் ஒரு நபராயிருந்தால் , நீ ஒரு இயற்கையான ஜீவியம் செய்கையில் உன் வாழ்நாள் முழுவதும் செய்யக் கூடிய அனைத்து செயல்களையும் பார்க்கிலும் அதிகமானவற்றை ஒரு மணி நேரத்தில் செய்து முடிக்கக் கூடியவனாயிருப்பாய் ' என்று ஒரு தேவமனிதன் கூறியிருக்கிறார் . நாம் இரு விதங்களில் வாழ்க்கை நடத்த லாம் என்று நம் சபையின் முன்னாள் உதவி தலைமை பாஸ்டராயிருந்த பாஸ்டர் S. B. ஏர்னஸ்ட் அவர்கள் கூறுவதுண்டு . பறவைகளால் நடக்கவும் கூடும் , பறக்கவும் கூடும் . நடப்பதின் மூலம் ஒரு பறவையானது சிறிதளவு தூரத்தை மட்டுமே கடந்துசெல்லக் கூடும் . ஆனால் பறப்பதன் மூலம் அது மலைகளையும் ஆறுகளையும் மற்ற பல தடைகளையும் கடந்து செல்லக் கூடும் . ஆவியானவரால் வழிநடத்தப்படும் ஜீவியமானது ஒரு பறவை பறந்துசெல்வதைப் போன்றதாகும் . 


எகிப்திலிருந்து கானானுக்குச் செல்லும் பிரயாணம் சில நாள் பிர யாண தூரம் மட்டுமே ஆகும் . ஆனால் இஸ்ரவேல் ஜனங்கள் கானானைச் சென்றடைய நாற்பது ஆண்டுகளாயின . அவர்களை வழிநடத்தியவர் கர்த்தரே அன்றி , மனுஷன் அல்ல . அவ்வாறிருக்க , அவர் ஏன் அவர்களை நாற்பது ஆண்டுகள் சுற்றிநடக்கப் பண்ணினார் ? ஆம் ! நம்முடைய இருதயத்தின் நிலைக்குத் தக்கதாகவே தேவன் நம்மை வழிநடத்துகிறார் . 


தம்முடைய ஜனங்களை வனாந்தரத்தின் வழியாக எடுத்துச்செல்ல வேண்டுமென்பது தேவனுடைய விருப்பமாய் இருக்கவில்லை ; ஆனால் அவர்களுடைய இருதயத்தின் நிலைவரத்தின் நிமித்தமாகவே அவர் அவ்விதம் செய்ய வேண்டியதாயிற்று . நம்மில் சிலருக்கு வாழ்நாள் முழுவதும் ஒரு வனாந்தரப் பிரயாணமாகவே இருக்கிறது . வனாந்தரம் என்பது பூக்களோ , புல்வெளியோ , இலைகளோ . நிழலோ , கனிவர்க்கங் களோ இல்லாத ஒரு இடமாகும் . அது வறண்டதும் மனித சஞ்சாரமற்றது மான ஒரு இடமாகும் . தேவன் நமக்கு வழிநடத்துதலைத் தரவேண்டு மாயின் , அவர் தாம் விரும்புகிற பாதையில் நம்மை வழிநடத்த வேண்டு மாயின் , நம் இருதயம் தேவனோடு செம்மையானதாய் இருக்க வேண்டும் . நம் இருதயம் முரட்டாட்டமுள்ளதாகவும் , கடினமானதாகவும் இருக்குமாயின் , தேவன் நம்மை நடத்துகிற பாதைகள் நமக்குக் கடினமாகவே தோன்றும் ,


" தங்கள் கோணலான வழிகளுக்குச் சாய்கிறவர்களைக் கர்த்தர் அக்கிரமக்காரரோடே போகப்பண்ணுவார் . இஸ்ரவேலுக்கோ சமாதானம் உண்டு ” ( சங் . 125 : 5 ) , நம்முடைய கோணலான வழிகளை நாம் பற்றிப் பிடித்துக்கொண்டிருந்தால் , கர்த்தர் தம்முடைய பூரணமான வழிகளை நமக்குக் காண்பிக்க மாட்டார் . எனவே நாம் கர்த்தருக்குப் பயந்து பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டு விலகுவோமாக .

Post a Comment

Previous Post Next Post