இராக்காலத்தில் கிரியை செய்கிற தேவன்


இராக்காலத்தில் கிரியை செய்கிற தேவன்



 ' அப்பொழுது கர்த்தர் இராமுழுதும் பலத்த கீழ்காற்றினால் சமுத்திரம் ஒதுங்கும்படி செய்தார் ' ( யாத் . 14 : 21 ) . 


தேவன் தம்முடைய ஜனங்களுக்காக எவ்விதம் கிரியை செய்கிறார் என்பதைக் காண்பது ஆர்வமூட்டுவதாயிருக்கிறது . இஸ்ரவேலருக்கு முன்பாகச் சிவந்த சமுத்திரமும் , அவர்களுக்குப் பின்னாக அவர்களைப் பின்தொடர்ந்து வந்த எகிப்தியரின் சேனையும் இருந்தபோது , அச்சந்தர்ப் பத்தில் தேவன் அவர்களுக்காகக் கிரியை செய்தார் . தேவன் அந்த இரவு - ஆம் அந்த இரவு முழுவதும் - கிரியை செய்துகொண்டிருந்தார் என்பதை நாம் மறவாதிருப்போமாக . பல சந்தர்ப்பங்களிலும் நம் ஆவிக்குரிய ஜீவியத்தில் நாம் அந்தகாரமான இரவுகளைச் சந்திக்கும்போது , தேவன் இரவு முழுவதும் நமக்காகக் கிரியை செய்கிறவர் என்ற உண்மையை நாம் மறந்துவிடுகிறோம் . சில சமயங்களில் எங்கே போவது , என்ன செய்வது , நாளைய தினத்தை எவ்விதம் சந்திப்பது என்றறியாதவர்களாய் நாம் அந்தகாரத்தில் இருப்பது உண்மையே . உதவி ஏதுமற்ற நிலையில் , நாம் வனாந்தரத்தில் தனித்து விடப்பட்டதைப் போல் உணருகிறோம் . ஆனால் , ' அந்த இரவு முழுவதும் ' நமக்காகக் கிரியை செய்கிற ஒரு அற்புதமான இரட்சகர் நமக்கு இருக்கிறாரே ! அவருக்கு ஸ்தோத்திரம் ! 


உலகிலுள்ள மிகவும் விலையேறப்பெற்றவையும் பிரகாசமுள்ள வையுமான கற்கள் , வெகு நீண்ட காலங்களாகப் பூமியின் அடித்தளத்தில் முற்றிலும் அந்தகாரத்தில் கிடக்கும்போதுதான் அவ்விதம் உருவாக்கப் படுகின்றன . நாம் புதிய எருசலேமாகக் கட்டியெழுப்பப்படுவதற்கென்று தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஜீவனுள்ள கற்களாயிருக்கிறோம் . எவ்வளவதிகமாய் நாம் அந்தகாரத்தின் வழியாகச் செல்லுகிறோமோ , அவ்வளவதிகமாய் நாம் அவருடைய மகிமைக்காகப் பிரகாசிக்கிறோம் ! அந்தகாரமான இரவை வெற்றியுடன் கடந்து வந்தவர்களுக்காகக் கர்த்தர் பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமாக விடியற்காலத்தில் வருவார் .


அருமையான தேவபிள்ளையே , காரியங்கள் அசாத்தியமானவை யாகத் தோன்றும் ஒரு சூழ்நிலை தற்போது உன்னைச் சந்தித்துக்கொண் டிருக்கக் கூடும் . உன் ' இரவானது ' அதிக அந்தகாரமாயிருக்கக் கூடும் . அந்த இரவின் காரிருளினூடாகத் தேவன் கிரியை செய்துகொண்டிருக் கிறார் என்பதையும் , எல்லாவற்றையும் உன் நன்மைக்காக மாற்றிக் கொண்டிருக்கிறார் என்பதையும் நீ மறந்துவிடாதே . இந்தச் சிந்தனை யினால் பெலப்படுத்தப்பட்டு , திடனடைந்தவனாக , ' முன்னேறிச் செல் ' ( யாத் . 14 : 15 -Eng . ) என்ற அவருடைய கட்டளைக்கு நீ கீழ்ப்படிவாயாக .

Post a Comment

Previous Post Next Post