பெரிய கிருபையின் மிகப் பெரிய வல்லமை


பெரிய கிருபையின் மிகப் பெரிய வல்லமை



 " தேவன் , மகா மச்சங்களையும் , ஜலத்தில் ... திரளாய் ஜநிப்பிக்கப்பட்ட சகலவித நீர் வாழும் ஜந்துக்களையும் ... சிருஷ்டித்தார் " ( ஆதி . 1 : 21 ) . 


' ஜலமானது திரளாய் ஜநிப்பித்த பெரிய திமிங்கலங்களைத் தேவன் சிருஷ்டித்தார் ' என மேற்காணும் வேதபகுதியின் ஆங்கில மொழி பெயர்ப்பு கூறுகிறது . திமிங்கலங்கள் ஆழமும் விசாலமுமான தண்ணீர் களிலேயே பிறப்பிக்கப்பட முடியும் . அவ்வாறே , பெரிய பரிசுத்தவான்கள் பெரிய கிருபையினால் மட்டுமே உண்டாக்கப்படக் கூடும் . 


ஒரு பெரிய மீனானது ( திமிங்கலம் வழிதவறிச் சென்ற யோனாவைச் சமுத்திரத்தின் அபாயங்களிலிருந்து பாதுகாத்து , முற்றிலும் மாற்றப்பட்ட ஒரு மனிதனாகக் கரையில் கொண்டுபோய்ச் சேர்த்ததாக நாம் வாசிக்கிறோம் . வழிதவறிச் செல்லும் தேவபிள்ளைகளைப் பாதுகாக்கும்படி அவர்களுடைய தவறுகளைச் சுமந்து , தங்கள் ஜெபங்களின் மூலம் பாவம் நிறைந்த இவ்வுலகத்திலிருந்து அவர்களைத் தப்புவித்துப் பாதுகாத்து , அவர்கள் க்ஷேமமாகப் பரலோகக் கரையைச் சென்றடையும்படி அவர் களுக்கு உதவி செய்யக்கூடிய பெரிய பரிசுத்தவான்கள் நமக்குத் தேவை ! அப்படிப்பட்ட விசாலமான இருதயமுள்ள பரிசுத்தவான்களே சபை யின் மிகப் பெரிய தேவையாயிருக்கிறார்கள் . பின்மாற்றமடைந்திருந்த கொரிந்திய சபையாரிடம் அப் . பவுல் , ' எங்கள் வாய் உங்களோடே பேசத் திறந்திருக்கிறது , எங்கள் இருதயம் விசாலமடைந்திருக்கிறது ' II கொரி . 6 : 11 -Eng . ) என்று கூறுகிறார் . 


பெரிய திமிங்கலங்கள் மிக அதிகமான தண்ணீர்களில்தான் எப்போதும் இருக்க வேண்டும் . இல்லையேல் அவை மாண்டுபோகும் .


நாம் பெரிதும் உன்னதமுமான அழைப்பினால் அழைக்கப்பட்டிருக் கிறோம் . எனவே நமக்குப் ' பெரிய கிருபை ' அவசியமாயிருக்கிறது ; அக்கிருபை இன்றி நம்மால் பிழைத்திருக்கவே முடியாது . 


அருமையான வாசகரே , நமக்குள்ளிருக்கும் பெரிய கிருபையானது நம்மைப் பெரிய பரிசுத்தவான்களாய் மாற்றக்கூடியதாயிருக்கிறது . அப் பவுல் , “ நான் இருக்கிறது தேவகிருபையினாலே இருக்கிறேன் ” 1 கொரி . 15 : 10 ) என்று கூறுகிறார் . தேவகிருபைக்கு எல்லையே இல்லை . ஆயினும் அதற்கு நாம் என்ன எல்லையை விதிக்கிறோமோ , அதுவே நம் ஜீவியத்தில் அதன் எல்லையாயிருக்கும் . 


பாய்ந்து வரும் நதியானது சமுத்திரத்தில் விழும் முகத்துவாரங் களில்தான் திமிங்கலங்கள் பிடிக்கப்படுகின்றன . ஆழ்கடலில் வாசம் பண்ணுகிற அவை வழிவிலகி , ஆழமில்லாத இடங்களுக்கு வந்துவிடும் போதுதான் கண்ணிக்குள் அகப்பட்டுவிடுகின்றன . எனவே நாம் வழி விலகி ஆவிக்குரிய வறட்சிக்குச் சென்று கண்ணியில் அகப்பட்டுவிடாத வாறு கவனமாயிருப்போமாக

Post a Comment

Previous Post Next Post