எழுந்து நில் ! 


எழுந்து நில் !



" உன்னைச் சுத்தவானாகக் காத்துக்கொள் " ( 1 தீமோ . 5 : 22 } . 


தன் கல்வியில் சிறந்து விளங்கியவளும் தன்னை ஆழமாகக் கர்த்தருக்கு அர்ப்பணித்திருந்தவளுமான ஒரு கிறிஸ்தவ மாணவி ஒரு பிரச்சினையைச் சந்தித்தாள் . அவள் தன் பட்டப் படிப்பில் படிக்க வேண்டியதாயிருந்த அநேக புத்தகங்களுள் குறிப்பாக ஒரு புத்தகத்தில் தன் மனதைத் தீட்டுப்படுத்தக்கூடிய விஷயங்கள் அடங்கியிருப்பதை அறிந்தாள் . அவள் அது வரை தன் ஜீவியத்தைத் தூய்மையாகக் காத்து வந்திருந்தபடியால் , இது அவளுக்கு ஒரு சவாலாக இருந்தது . ஒன்று , அவள் அப்புத்தகத்தை வாசிக்காமலிருந்து , தேர்வில் தோல்வியடைய வேண்டும் ; அல்லது அதை வாசித்து , தேர்வில் தேர்ச்சிபெற வேண்டும் - இவற்றில் ஒன்றை அவள் தெரிந்துகொள்ள வேண்டியதாயிருந்தது . அவள் அதைக் குறித்து ஜெபித்து , தன் மனதைத் தீட்டுப்படுத்திக்கொள்வதைக் காட்டிலும் , தேர்வில் தோல்வியடைவதே நலம் என்று தீர்மானித்தாள் . 


தேர்வின்போது வினாத்தாளில் , அப்புத்தகத்திலிருந்து கேட்கப்பட்ட வினாவுக்கு , அதிகமான மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டிருந்தது , அதில் அப்புத்தகத்தைப் பற்றி இரண்டு பக்கங்களுக்கு விமரிசனம் எழுதும் படியாகக் கேட்கப்பட்டிருந்தது . அவள் ஜெபித்து , அப்புத்தகத்தில் அடங்கி யுள்ள விஷயங்கள் எவ்விதம் ஒரு வாலிபனைத் தீட்டுப்படுத்தக் கூடும் என்பதையும் , தீட்டுப்படுதலின் விளைவுகள் பற்றியும் இரு பக்கங்கள் எழுதினாள் ; அவள் அப்புத்தகத்தை மிகக் கடுமையாகக் கண்டனம் பண்ணி எழுதியிருந்தாள் . தேர்வு முடிவுகள் வெளிவந்தபோது , அந்தத் தேர்வில் அவள் அக்கல்லூரியில் தன்னுடன் பயின்ற மற்ற அனைவரிலும் மிக அதிகமான மதிப்பெண்களைப் பெற்றிருந்ததைக் கண்டு வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்தாள் . 


அன்பான தேவபிள்ளையே , உன் ஜீவியத்தைத் தூய்மையாகக் காத்துக்கொள்வதற்கான விலைக்கிரயத்தைச் செலுத்த நீ ஆயத்தமா ? நீ முதுகெலும்புள்ள ஒரு கிறிஸ்தவனாயிருக்க வேண்டும் . ' ஒரு குறிப்பிட்ட காரியத்திற்காக உறுதியாக நிற்கக் கூடாத ஒருவன் , எப்படிப்பட்ட காரியத்திற்காக வேண்டுமானாலும் விழுந்துவிடக் கூடியவனாயிருப்பான் ' பரிசுத்தத்திற்காக நிமிர்ந்து நிற்பாயாக . ஒருவன் தன் வாழ்க்கையில் சந்திக்கக்கூடிய மிகப் பெரிய தோல்வி , ஒழுக்கநெறி தவறுதலாகிய தோல்வியே ( moral failure ) ஆகும் .

Post a Comment

Previous Post Next Post