' ஷாலோம் ஷாலோம் ' என்றால என்ன ?


“ உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் ( ' உம் மேலேயே தங்கியிருக்கும் மனதை உடையவன் ' -Eng ) உம்மையே நம்பியிருக்கிறபடியால் , நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர் ” ( ஏசாயா 26 : 3 ) .


“ உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் ( ' உம் மேலேயே தங்கியிருக்கும் மனதை உடையவன் ' -Eng ) உம்மையே நம்பியிருக்கிறபடியால் , நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர் ” ( ஏசாயா 26 : 3 ) . 


மேற்காணும் வசனத்தில் ' பூரண சமாதானம் ' என்பதற்கு மூல எபிரெய மொழியில் ' ஷாலோம் ஷாலோம் ' என்று கூறப்பட்டுள்ளது . அதன் அர்த்தம் , ' இரட்டிப்பான சமாதானம் ' அல்லது ' இரட்டிப்பான ஆரோக் கியம் ' என்பது ஆகும் . உன் மனது கர்த்தர் மேலேயே தங்கியிருந்தால் , அல்லது நீ கர்த்தரிலேயே நம்பிக்கையாயிருக்கும்போது கர்த்தர் உன்னை ஷாலோம் ஷாலோமில் அதாவது பூரண சமாதானத்தில் அல்லது பூரண ஆரோக்கியத்தில் பாதுகாப்பார் . உன் மனது கர்த்தர் மீது தங்கியிராமல் , எப்போதும் உன் பிரச்சினைகளின் மேலேயே இருக்குமாயின் , நீ எப்போதும் கவலைப்பட்டுக்கொண்டேயிருப்பாய் . மாறாக , உன் ஆவிக் குரிய கண்கள் கர்த்தர் மேலேயே பதிக்கப்பட்டிருக்குமாயின் , நீ எப்போ தும் ஆழ்ந்த அமைதியை அல்லது பூரண சமாதானத்தை அனுபவிப்பாய் .


ஒருவேளை இன்று நீ வியாதிப்பட்டிருக்கக் கூடும் . உன் மனது அந்த வியாதியின் மீதே தங்கியிருக்குமாயின் , அவ்வியாதியின் அறிகுறிகளும் அதன் தோற்றமும் , அதைக் குறித்து மற்றவர்கள் கூறும் அபிப்பிராயங்களும் உன்னைப் பயமுறுத்தும் . ஆனால் நீ கர்த்தரில் நம்பிக்கையாயிருந்தால் , அதாவது உன் மனது கர்த்தரிலேயே தங்கியிருந் தால் , அவர் உன்னைச் சுகமாக்க வல்லவராயிருப்பது மாத்திரமல்ல , நீ இழந்து போன ஆரோக்கியத்தையும் சமாதானத்தையும் உனக்கு மீண்டும் தரவும் வல்லவராயிருக்கிறார் .


 அருமையான தேவபிள்ளையே , நீ ஒருவேளை தேவனில் நம்பிக்கையாயிருப்பதாகக் கூறலாம் . ஆனால் உன் மனது அங்குமிங்கும் அலைந்து திரிந்து , கவலைப்பட்டு , உன் பிரச்சினைகளின் மேலேயே தங்கியிருக்கக் கூடும் . தேவனுடைய வசனம் கூறுவது யாது ? " நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல் , எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டு தலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள் . அப்பொழுது , எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும் ” பிலி 4 : 6 , 7 ) . உன் எல்லா ஜெபங்களுக்கும் நீ விரும்புகிற வண்ணமாக பதில் கிடைக் கும் என்று இவ்வசனம் கூறுகிறதில்லை . ஆனால் உன் கவலைகளைத் தேவன் அறிந்திருக்கிறார் என்ற நிச்சயம் உன்னில் உண்டாகும் போது , நீ மன அமைதியைப் பெற்றுக்கொள்ளுகிறாய் . 


உன் பிரச்சினைகளைக் காட்டிலும் உன் தேவன் பெரியவர் . அவர் மிகவும் பெரியவரும் மகா ஞானமுள்ளவருமாயிருப்பதால் அவரிடத்தில் உன் எல்லாப் பிரச்சினைகளுக்கும் பூரண நிவாரணமுண்டு .

1 Comments

Post a Comment

Previous Post Next Post