அதிசயமான புத்தகம் 


அதிசயமான புத்தகம்


" கர்த்தருடைய புஸ்தகத்திலே தேடி வாசியுங்கள் ; இவைகளில் ஒன்றும் குறையாது ; இவைகளில் ஒன்றும் ஜோடில்லாதிராது ; அவருடைய வாய் இதைச் சொல்லிற்று ; அவருடைய ஆவி அவைகளைச் சேர்க்கும் ”(ஏசாயா 34 : 16) 


இவ்வசனம் எவ்வளவாய் நம்மை அனல்மூட்டி எழுப்பக் கூடியதும் , ஊக்குவிப்பதுமாய் இருக்கிறது ! வேதவாக்கியங்கள் , தேவனுடைய வசனம் அல்லது பரிசுத்த வேதாகமம் என்று நாம் அழைக்கிற நமது வேத புத்தகமானது ' தேவனுடைய ஆவி'யினால் ( பரிசுத்த ஆவி ஒன்றாகச் சேர்க்கப்பட்ட அல்லது தொகுத்தெழுதப்பட்ட ஒரு புத்தகமாகும் . உண்மை யில் , ஆசீர்வதிக்கப்பட்ட திரித்துவ தேவன்தாமே இன்று நம் கரங் களிலுள்ள வேதாகமத்தின் ஆக்கியோனாயிருக்கிறார் . மேற்கூறப்பட்டுள்ள வேதபகுதியில் , ' கர்த்தருடைய புத்தகம் ' என்பதிலுள்ள ' கர்த்தர் ' என்பது யேகோவாவை அல்லது பிதாவாகிய தேவனையும் , " அவருடைய வாய் ” என்பது கர்த்தராகிய இயேசுவையும் , " அவருடைய ஆவி ” என்பது பரிசுத்த ஆவியானவரையும் குறிக்கின்றன . 


நமது கையில் நாம் வைத்திருக்கிற வேதாகமம் . திரித்துவ தேவனி டமிருந்து வந்ததாயிருக்கிறது என்பதையும் , அது தன்னில் தானே நிறை வுள்ளதாய் , பூரணமானதாய் இருக்கிறது என்பதையும் அறிந்துகொள்வது நம் யாவரையும் எவ்வளவாய் ஊக்குவிப்பதாயிருக்கிறது ! சிலர் தள்ளுபடி யாகமத்தை ( Apocrypha ) அதனுடன் சேர்க்க விரும்பினார்கள் என்பது எவ்வளவு துக்ககரமானது ! வேதாகமத்தின் கடைசிப் புத்தகத்தின் கடைசி அதிகாரத்திலுள்ள எச்சரிப்பைக் கவனியுங்கள் : “ ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால் , இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார் . ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின்


வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால் , ஜீவபுஸ்தகத்திலிருந் தும் , பரிசுத்த நகரத்திலிருந்தும் , இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலி ருந்தும் , அவனுடைய பங்கைத் தேவன் எடுத்துப்போடுவார் " ( வெளி 22 : 18 , 19 ) . 


அதிசயமான திரித்துவ தேவன்தாமே . தாம் நமக்கு அருளிச் செய்துள்ள இந்த அதிசயமான புத்தகத்திலுள்ள அதிசயமான காரியங் களைக் கண்டுகொள்ள நமக்கு அனுதினமும் கிருபை அருள்வாராக .


 “ உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு , என் கண்களைத் திறந்தருளும் ” ( சங் . 119 : 18 ) என்பது நம் அன்றாடக ஜெபமா யிருப்பதாக .

Post a Comment

Previous Post Next Post