உறைந்த மழையின் பண்டசாலை  என்றால் என்ன ?


உறைந்த மழையின் பண்டசாலை  என்றால் என்ன ?



" உறைந்த மழையின் பண்டசாலைகளுக்குள் ( Eng . - பொக்கிஷங்களுக்குள் ) நீ பிரவேசித்தாயோ ? " ( யோபு 38 : 22 ) . 


மேற்கூறப்பட்டுள்ள வேதவாக்கியத்தின் அடிப்படையில் உறைந்த மழைக்குள் பொக்கிஷங்கள் இருக்கிறது என்பது போல் தோன்றுகிறது . தேவனுடைய வசனத்தில் , உறைந்த மழை என்பது தூய்மைக்கு ஒப்பிடப்பட்டுள்ளது : " உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப்போல் வெண்மையாகும் ; அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந் தாலும் பஞ்சைப்போலாகும் " ( ஏசாயா 1 : 18 ) ; " என்னைக் கழுவியருளும் , அப்பொழுது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன் " ( சங் . 51 : 7 ) என்று நாம் வாசிக்கிறோம் . இதிலிருந்து ஜீவியத்தின் தூய்மையானது விலையேறப்பெற்ற பண்டசாலையாக அதாவது விலையேறப்பெற்ற பொக்கிஷமாக இருக்கிறது என்று நாம் விளங்கிக்கொள்கிறோம் . 


பனி எப்போதும் குளிர்ச்சியானது . பரிசுத்த ஜீவியம் செய்கிற வர்கள் கடுந்துயரார்ந்த சூழ்நிலைகளிலுங்கூட சாந்தமுள்ளவர்களாகவும் , மற்றவர்களுக்கு ஆறுதலளிக்கிறவர்களாகவும் இருப்பார்கள் . பனித்துளி யானது ஒளி ஊடுருவிச்செல்லக் கூடியதாகத் துலாம்பரமானதாகவும் , பளிங்கைப் போலத் தெளிவானதாகவும் இருக்கிறது . நாம் உண்மையாகவே ஜீவியத்தின் தூய்மையை நேசிப்போமாயின் , புறம்பே ஒன்றை வெளிப் படுத்திக்கொண்டு , உள்ளேயோ வேறு விதமாக இருக்க மாட்டோம் . பளிங் கைப் போன்ற ஒளிவுமறைவற்ற துலாம்பரமான சுபாவமுள்ளவர்களா யிருத்தல் என்பது , மறைவான பாவங்களோ , மறைத்துவைக்கப்பட்டிருக்கும் அசுத்தமான நோக்கங்களோ அற்றவர்களாயிருத்தல் ஆகும் . பனியானது சூரிய வெளிச்சத்தில் உருகுகிறது . 


அவ்விதமாகவே பரிசுத்தத்தை நேசிக்கிற வர்களின் இருதயங்கள் எப்போதும் தேவசமுகத்தில் உருகுகின்றன . தேவஜனங்களில் அநேகர் பரிசுத்த ஜீவியத்திலுள்ள பொக்கிஷங் களை அனுபவியாதவர்களாயிருக்கின்றனர் . ' பண்டசாலைகள் உனக்குள் பிரவேசித்திருக்கின்றனவோ ? ' என்பதல்ல , “ பண்டசாலைகளுக்குள் நீ பிரவேசித்தாயோ ? " என்பதே தேவன் யோபிடம் கேட்ட கேள்வியாகும் . சமுத்திரம் உனக்குள் பிரவேசிப்பதும் , நீ சமுத்திரத்திற்குள் குதிப்பதும் இரு வித்தியாசமான காரியங்களாகும் . அது போன்றே , பரிசுத்தம் உனக்குள் பிரவேசிப்பதற்கும் , நீ பரிசுத்தத்திற்குள் பிரவேசிப்பதற்கும் இடையே வித்தியாசம் இருக்கிறது . நீ தேவனுடைய பரிசுத்தத்திற்குள் பிரவேசிக்கும் போது , நீ தேவனுடைய பரிசுத்தத்தின் சமுத்திரத்திற்குள் அமிழ்ந் திருக்கிறாய் ; அந்தச் சமுத்திரமானது உன்னைச் சூழ்ந்திருக்கிறது ; உன்னை மூடிக்கொண்டிருக்கிறது ; உன்னை முடிசூட்டிக்கொண்டிருக்கிறது . அது நீ தேவனை உனக்குச் சொந்தமாக்கிக்கொள்வதைப் பார்க்கிலும் மேலான ஒன்றாகும் . அது தேவன்தாமே உன்னை முற்றிலுமாகத் தமக்குச் சொந்த மாக்கிக்கொள்வதாகும் . நீ தேவனுடைய கிருபையை அனுபவித்துக் கொண்டிருக்கக் கூடும் . ஆனால் சகல கிருபையும் பொருந்திய தேவனையே நீ அனுபவித்து மகிழ்வது என்பது அதைக் காட்டிலும் மேன்மையானது ! 


அன்பான தேவபிள்ளையே , நீ ஏன் உறைந்த மழையின் பண்ட சாலைகளுக்குள் பிரவேசிக்கக் கூடாது ? ஜீவியத்தின் தூய்மையாகிய இப்பொக்கிஷசாலைகளுக்குள் பிரவேசிப்பதற்காக நீ ஏன் இப்போதுதானே உன்னை அர்ப்பணிக்கக் கூடாது ?

Post a Comment

Previous Post Next Post