ஒரு தெய்வீக நரம்பியல் நிபுணரின் கண்டுபிடிப்பு 


ஒரு தெய்வீக நரம்பியல் நிபுணரின் கண்டுபிடிப்பு



“ மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும் ” ( நீதி . 18 : 21 ) . 


புகழ்பெற்ற நரம்பியல் மருத்துவ நிபுணர் ஒருவர் . மனிதனின் மூளையிலுள்ள பேச்சு நரம்பு மண்டலம் உடலின் மற்றெல்லா நரம்புகளின் மீதும் முழு ஆதிக்கம் உள்ளதாயிருக்கிறது என்று சமீபத்தில் கண்ட பிடித்திருக்கிறார். இவ்வுண்மை இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் பரிசுத்த வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ளது .


 தெய்வீக நரம்பியல் வல்லுநராகிய அப் . யாக்கோபு , “ அப்படியே , நாவானதும் சிறிய அவயவமாயிருந்தும் பெருமையானவைகளைப் பேசும் . பாருங்கள் , சிறிய நெருப்பு எவ்வளவு பெரிய காட்டைக் கொளுத்திவிடு கிறது ! நாவும் நெருப்புத்தான் , அது அநீதி நிறைந்த உலகம் ; நம்முடைய அவயவங்களில் நாவானது முழுச்சரீரத்தையும் கறைப்படுத்தி , ஆயுள் சக்கரத் தைக் கொளுத்திவிடுகிறதாயும் , நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிற தாயும் இருக்கிறது . ” ( யாக் . 3 : 5 , 6 ) என்று கூறுகிறார் . அப் யாக்கோபின் இந்த ஆச்சரியமான கண்டுபிடிப்பு தேவனிடத்திலிருந்து அவருக்குக் கிடைத்த இயற்கைக்கப்பாற்பட்ட வெளிப்படுத்தலே அன்றி வேறல்ல . 


ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது சரீரத்தில் நூறு மில்லியன் நரம்பணுக்கள் ( நியூரோன்கள் ) இருக்கின்றன என்றும் . ஒவ்வொரு நரம்பணுவும் ஐயாயிரம் மில்லியன் செய்தித்துணுக்குகளைத் தனக்குள் கொண்டிருக்கக்கூடியது என்றும் கணக்கிடப்பட்டுள்ளது . நம்முடைய நாவானது உண்மையில் நம் சரீரத்திலிருக்கும் நூறு மில்லியன் நியூரோன்களின் மீதும் பூரண கட்டுப்பாடுள்ளதாயிருக்கிறது என்பதைக் கண்டுகொள்வது மிக ஆச்சரியமானதாய் ( ஒருவேளை நம்மில் சிலருக்கு அது அதிர்ச்சியளிப்பதாய் ) இருக்கிறதல்லவா ? 


' நான் அதிக பெலவீனமாயிருக்கிறேன் ' என்று நீ கூறுவாயானால் , உடனே பேச்சு மண்டலத்திலிருந்து ' நீ பெலவீனமாயிருக்க ஆயத்த மாயிரு ' என்ற கட்டளையானது எல்லா நரம்புகளுக்கும் செல்கிறது . உடனே உன் முழுச் சரீரமும் இளைப்பாற வேண்டும் , படுக்கைக்குச் செல்ல வேண்டும் என்பவை போன்ற உணர்வுள்ளதாகிவிடும் ; அப்போது எந்த வேலையும் செய்வதற்குப் பெலனற்றவனாயிருப்பதாக நீ உணருவாய் .


 அதுபோன்றே , குறிப்பிட்ட ஒரு நபர் மிகவும் மோசமானவர் என்று நீ கூறும்போது , உன் நரம்பணுக்கள் யாவும் அதை அப்படியே உண்மை என ஏற்றுக்கொண்டு , அதற்கு இசைந்துபோக முற்படுகின்றன . அதன் பின்னர் வேறொருவர் அதே நபரைக் குறித்து அவர் மிகவும் நல்லவர் என்று சொல்வாராயின் , உன் நரம்புகள் எல்லாம் எரிச்சலடைந்து அக்கூற்றுக்கு எதிர்த்துநிற்கின்றன . அதே சமயத்தில் அந்நபரைக் குறித்து வேறொருவர் அவர் மிக மோசமான மனிதன் என்று கூறுவாராயின் , அதைக் கேட்டவுடன் நீ அதிக சந்தோஷமடைந்து , அவரிடம் , ' நீ கூறுவது சரி , நீ கூறுவதை நான் ஒத்துக்கொள்கிறேன் ' என்று கூறுவாய் . மற்றவர்கள் அந்த நபரில் ஆயிரம் நல்ல காரியங்களைக் கண்டாலும் , உன்னால் அவரில் ஒரு சிறிய நல்ல காரியத்தையாகிலும் காணக்கூடா திருக்கும் அளவுக்கு உன் நரம்பணுக்கள் யாவும் உன் நாவுக்கு அவ்வளவ திகமாய்க் கீழ்ப்படிகின்றன என்பதை நீ ஒருவேளை உணராதிருக்கக் கூடும் . அதற்கான எளிய காரணம் யாதெனில் , நீ உன் நூறு மில்லியன் நரம்புகளுக்கும் ஏற்கனவே அப்படியே கட்டளை கொடுத்திருக்கிறாய் ! ' உலகிலேயே மிக அபாயகரமான கூர்முனை நாவின் நுனிப் பகுதியே ! ' என்பது மெய்யான கூற்றாகும் . எனவே அருமையான தேவபிள்ளையே , நீ உன் நாவை எவ்விதம் உபயோகிக்கிறாய் என்பதைப் பற்றி கவனமாயிரு .

Post a Comment

Previous Post Next Post