அதைரியத்துக்கு எதிரான பட்டயம்

 
அதைரியத்துக்கு எதிரான பட்டயம்


" தேவன் சொன்னது உண்டோ " ( ஆதி . 3 : 11 .


 தேவனுடைய வாக்குத்தத்தங்களில் வாசமில்லாதிருப்பதே அதைரியத்துக்குப் பின்னாக மறைந்திருக்கும் வேராயிருக்கிறது . பிசாசானவன் பேசிய வார்த்தைகளாக முதலாவது பதிவு செய்யப்பட்டுள்ள வார்த்தைகள் “ தேவன் சொன்னது உண்டோ ” என்பவையாகும் . இது ஸ்திரீயானவள் தேவனுடைய வார்த்தையைச் சந்தேகிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அவன் கேட்ட கேள்வியாகும் . கர்த்தராகிய இயேசு தம்மைச் சோதிக்கும் படி வந்த சாத்தானுக்கு விரோதமாக தேவனுடைய வார்த்தையையே எடுத்துப் பிரயோகித்தார் . ' இவ்விதம் எழுதியிருக்கிறதே ' , ' இவ்விதம் எழுதியிருக்கிறதே ' , ' இவ்விதம் எழுதியிருக்கிறதே ' என்று தேவனுடைய வார்த்தையையே அவர் உபயோகித்தார் . தேவனுடைய வார்த்தை வரும் போது , அதைரியமாகிய பிசாசு கட்டாயமாக ஓடிப்போகத்தான் வேண்டும் . தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும் , இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும் இருக் கிறது . அது நமக்கு ஜீவனையும் , புதிய ஜீவனையும் கொடுக்கக் கூடியதா யிருக்கிறது . முழு உலகமும் அவருடைய வார்த்தையினால் சிருஷ்டிக்கப் பட்டு , அவருடைய வசனத்தினால் தாங்கப்பட்டுக்கொண்டிருக்கிறது . ஆகவே தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தை எடுத்துக்கொள் ளுங்கள் . நீங்கள் அதைரியத்தின் ஆதிக்கத்தில் ஜீவிக்க வேண்டிய அவசியமில்லை . 


ஒருமுறை தாவீது தன்னால் ஒன்றுமே செய்யக்கூடாத ஒரு நிலைக்குள்ளாகித் திகைத்துக்கொண்டிருந்தான் . அவன் யாதொரு போக்கிட முமற்றவனாக , தான் செய்யவேண்டியது இன்னதென்று அறியாதவனா யிருந்தான் . ' நானோ கர்த்தருடைய நன்மையைக் காண்பேன் என்று விசுவாசியாதிருந்தால் மனந்தளர்ந்து போயிருப்பேன் ' ( சங் . 27 : 13 -Eng . ) என்று அவன் கூறுகிறான் . உண்மையாகவே தன்னால் கர்த்தருடைய நன்மையைக் காண முடியாதிருந்தும் அவன் விசுவாசித்தான் . தேவனும் அவனுடைய விசுவாசத்தைக் கனப்படுத்தினார் . அவர் அவனுடைய யுத்தங்களையெல்லாம் நடப்பித்து , அவனுடைய பிரச்சினைகளையெல் லாம் தீர்த்தார் . நாம் நம்முடைய இயற்கையான கண்களால் காண முடியா ததை நம்முடைய ஆவிக்குரிய கண்களினால் கண்டு , விசுவாசத்தோடு தேவனை ஸ்தோத்திரித்து மகிமைப்படுத்த வேண்டும் . 


“ முடிந்தது " என்பதே கல்வாரிச் சிலுவையிலிருந்து புறப்பட்டு வரும் வெற்றி முழக்கமாகும் . “ முடிந்தது " என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா ? நம்முடைய சோதனைகள் , பிரச்சினைகளின் மேல் தேவன் ஏற்கனவே நமக்கு ஜெயமளித்துவிட்டார் . தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் - நமக்கு விரோதமாயிருப்பவன் யார் ? எந்தப் பிரச்சினை நமக்கு விரோதமாக நிற்க முடியும் ? கிறிஸ்துவின் அன்பை விட்டு நம்மைப் பிரிப்பவன் யார் ? இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்பு கூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே ! அருமையானவர்களே , நீங்கள் சாதாரண ஜனங்களல்ல . நீங்கள் தெரிந்து கொள்ளப்பட்ட சந்ததியாயும் . ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும் , பரிசுத்த ஜாதியாயும் , அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள் . நீங்கள் ராஜாதி ராஜாவுக்கும் , கர்த்தாதி கர்த்தருக்கும் , தேவாதி தேவனுக்கும் சொந்தமானவர்கள் , எந்தப் பிசாசும் உங்களுக்கு முன்பாக நிற்க முடியாது . 


அழுகை ஓர் இரவு மாத்திரம் தங்கக் கூடும் . ஆனால் விடியற் காலத்திலே களிப்புண்டாகும் . இருளுக்குப் பின் ஒரு பிரகாசமான விடியற் காலம் உண்டு , ஒரு ஆழமான பள்ளத்தாக்கை அடுத்து மிகப் பெரிய மலை ஒன்றுண்டு . தேவனுடைய வார்த்தையை நம்புங்கள் . அவர் உங்க ளுடைய கசப்பை மதுரமாக மாற்றித் தருவார் . அவர் இருளை வெளிச்ச மாக்குவார் . அவர் கலக்கத்தைச் சமாதானமாகவும் , உங்களுடைய வெறுமை யைத் தம்முடைய நிறைவாகவும் , உங்களுடைய வெட்கத்தை மகிமை யாகவும் , உங்களுடைய பெலவீனத்தைப் பெலனாகவும் , உங்களுடைய அசுத்தத்தைப் பரிசுத்தமாகவும் , உங்களுடைய மரணத்தை ஜீவனாகவும் , உங்களுடைய நரகத்தைப் பரலோகமாகவும் மாற்றுவார் . அவருடைய வார்த்தை அதைச் செய்யும் . ஆகவே தான் அவருடைய வார்த்தை ஊக்கு விக்கும் வார்த்தை என்று அழைக்கப்படுகிறது . உங்களை அதைரியப் படுத்துகிற ஆவியைக் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் கடிந்து கொள்ளுங்கள் .

Post a Comment

Previous Post Next Post