என்னவோர் அருமையான நண்பர் !


என்னவோர் அருமையான நண்பர் !



 “ அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன் ” ( எரே . 31 : 3 ) , 


நமக்கு அநேக நண்பர்கள் இருக்கக் கூடும் ; எனினும் நாம் துயருற்றிருக்கும் நேரங்களிலும் கலங்கியிருக்கும் சமயங்களிலும் அவர்கள் நம் அருகில் இராமற்போகக் கூடும் . ஆனால் ஆண்டவராகிய இயேசுவில் “ ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணை ” யாயிருக்கும் ( உதவிபுரியும் படி கூடவே இருக்கும்- Eng . ) மிக நெருங்கியதொரு நண்பர் நமக்குண்டு ( சங் . 46:11 . அவர் சமாதானப் பிரபுவாக இருப்பதால் , நாம் நம்பிக்கை இழந்து , மனமுறிவடைந்திருக்கும் சந்தர்ப்பத்தில் அவர் நம்மைப் பரலோக சமாதானத்தினால் நிறைக்கிறார் ; அவர் ஒளியாக இருப்பதால் , நாம் இருளினூடே கடந்து செல்லுகையில் அவர் நமக்கு வெளிச்சம் கொடுக் கிறார் . அவரே வழியாக இருப்பதால் நாம் வழி தவறுவது போல் தோன்றும் சமயங்களில் , நமக்கு வழிகாட்டுகிறார் . அவர் ஜீவ அப்பமாக இருப்பதால் , நாம் பசியாயிருக்கையில் அவர் நம்மைப் போஷிக்கிறார் . 


இவ்வுலகில் நமக்குச் சகலமும் சுமூகமாகவும் , அநுகூலமாகவும் இருக்கும்போது நமக்கு அநேக சிநேகிதர் இருப்பார்கள் . நம்முடைய பணத்தையும் பொருட்களையும் நாம் இழந்துபோகும் போது அவர்கள் நம்மை விட்டு விலகி , நம்மைக் கைவிட்டுவிடுவார்கள் . ஆண்டவராகிய இயேசுவோ நம்மை விட்டு ஒருபோதும் விலகாத ஒருவராயிருக்கிறார் - நாம் வறுமையினூடாகச் சென்றாலும் செழித்தோங்கியிருந்தாலும் அவர் நம்மோடு கூடவே இருப்பார் . நம்முடைய வறுமையில் அவர் நம்முடைய நித்திய ஐசுவரியங்களாயிருக்கிறார் ; நம்முடைய செழிப்பில் அவர் நம்முடைய மிகுந்த மகிழ்ச்சியாயிருக்கிறார் . அவர் மரணபரியந்தம் நம் வழிகாட்டியாயிருப்பதால் , நாம் வழிதவறிச் செல்ல அவர் ஒருபோதும் அனுமதிக்கவே மாட்டார் . நம்முடைய வழிகளிலெல்லாம் அவர் நம்முடனே கூட வருகிறார் . “ நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை , உன்னைக் கைவிடுவதுமில்லை " என்று தேவன் வாக்குரைத்திருக்கிறார் . இவ்வாக்குரைக்கப்பட்டு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கடந்து சென்று விட்டன ; ஆயினும் இவ்வுலகில் கோடிக்கணக்கானவர்கள் அவர் தாம் வாக்குத்தத்தம் பண்ணியதில் உண்மையுள்ளவராகவே இருப்பதை நிரூபித் தறிந்திருக்கின்றனர் . உண்மையில் அவருடைய நாமமே ' உண்மையும் சத்தியமுமுள்ளவர் ' என்பதாகும் ( வெளி . 19 : 11 ) . 


நமக்கு உதவி செய்ய முடியாத அளவுக்கு அதிக அலுவலுள்ள வர்களாயிருக்கும் நண்பர்களும் உண்டு . ஆனால் நம்முடைய பரலோக நண்பரோ நம்மைக் குறித்து எப்போதும் நினைவுள்ளவராகவே இருக்கிறார் . நம்மை இரவும் பகலும் காக்கும்படி அவர் தம்முடைய பரிசுத்த தூதர்களை அனுப்புகிறார் . அத்துடன் அவர் தாமே தூங்காமலும் உறங்காமலுமிருந்து நம்மைப் பாதுகாக்கிறார் . 


நாம் சில நண்பர்களிடம் நம்முடைய இருதயத்திலுள்ளதை யெல்லாம் வெளிப்படையாகக் கூற இயலாது : அவர்கள் நம்முடைய வேதனையையும் துயரத்தையும் விளங்கிக்கொள்ளக் கூடாதிருப்பர் ; நம்முடைய புண்பட்ட உணர்வுகள் , துயரங்கள் , நாம் சந்தித்துக்கொண் டிருக்கும் புறக்கணிப்புகள் ஆகியவற்றை அவர்களால் உணர்ந்துகொள்ள முடியாது . சில வேளைகளில் நம்முடைய இருதயத்திலுள்ளதையெல்லாம் நாம் பகிர்ந்துகொள்ளும்போது நம்முடைய மிக நெருங்கிய நண்பர்கள் கூட நம்மைத் தவறாக விளங்கிக்கொள்ளக் கூடும் . ஆனால் நாம் எந்தப் பிரச்சினையினூடே சென்றாலும் , நாம் சந்திக்கு சோதனை எதுவா யிருந்தாலும் நம்முடைய இருதயத்திலுள்ளதையெல்லாம் எப்போதுமே பகிர்ந்துகொள்ளக்கூடிய ஒரு நண்பர் கர்த்தராகிய இயேசுவில் நமக்குண்டு . ' வருத்தப்பட்டு , பாரமடைந்து , மிஞ்சின சுமையை சுமந்துகொண்டிருக்கிற வர்களே , நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள் , நான் உங்களை இளைப்பாறப்பண்ணுவேன் - நான் உங்கள் ஆத்துமாக்களை இலகு வடையப்பண்ணி , விடுதலையாக்கி , புத்துணர்வடையச் செய்வேன் ' ( மத் . 11 : 28  . ) என்று அவர் கூறுகிறாரே ! 


ஆம் , கர்த்தராகிய இயேசு நமக்கு எத்தகையதோர் உற்ற நண்பராய் இருக்கிறார் !

Post a Comment

Previous Post Next Post