உன் ஐக்கியத்தை இழந்துவிடாதே ! 


உன் ஐக்கியத்தை இழந்துவிடாதே !



" தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப் பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது . அது ஸ்திரீயை நோக்கி ... " ( ஆதி . 3 : 1 ) . 


ஸ்திரீயானவள் சர்ப்பத்திடம் பேசிக்கொண்டிருந்தபோதோ , அவள் விருட்சத்தின் கனியைப் பறித்தபோதோ , அவள் அதைப் புசித்தபோதோ நாம் அவளுடைய புருஷனை அவளுடன் இருக்கக் காண்பதில்லை . அவள் மனுஷனுக்கு ஏற்ற துணையாக இருக்க வேண்டும் என்பதே தேவன் சிருஷ்டித்ததின் நோக்கமாயிருந்தது . அவள் அவனுடன் எப்போதும் ஐக்கியமாக இருக்கும்படியாகவே அவளை அவர் மனுஷனிடத்தில் கொண்டுவந்தார் . ஸ்திரீயானவள் தன் புருஷனோடுள்ள ஐக்கியத்தை இழந்தபோது அவள் தேவனுடைய அன்புக்கும் சத்தியத் துக்கும் துரோகம் செய்கிறவளாக மாறிவிட்டாள் . ஸ்திரீயானவள் மனுஷனோடு எப்போதும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது போலவே , சபையானது கிறிஸ்துவாகிய தன் மணவாளனோடு எப்போதும் நெருங்கிய ஐக்கியமுள்ளதாயிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப் படுகிறது . அப்படியிராவிடில் அது பிசாசினால் வஞ்சிக்கப்பட்டு , கிறிஸ்து வுக்கு விரோதமாகப் பாவஞ்செய்ய நேரிடும் . 


தன் விலையேறப்பெற்ற நேரத்தை ஆதாமோடு உரையாடுவதில் உபயோகிப்பதற்குப் பதிலாக , ஸ்திரீயானவள் சர்ப்பமாகிய பிசாசோடு சம்பாஷித்துக்கொண்டிருந்தாள் . ஜெபிக்கவோ , தேவனோடு உரையாடவோ தங்களுக்கு நேரமில்லை என்று சொல்லிக்கொள்ளும் தேவபிள்ளைகள் , பெரும்பாலும் பிசாசோடு உரையாட அதிகமான நேரம் உள்ளவர்களா யிருக்கிறார்கள் . மேலும் கர்த்தரோடு நெருங்கிய ஐக்கியமுள்ளவர்களா யிருக்கும் பரிசுத்தவான்களோடும் நமக்கு ஐக்கியம் இருக்க வேண்டியது இன்றியமையாததாகும் . ' நீங்கள் எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாயிருங் கள் . மெய்யாகவே எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமார னாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது ' ( 1 யோவான் 1 : 3 -Eng . ) என அப் . யோவான் எழுதுகிறார் . முதலாம் நூற்றாண்டின் விசுவாசிகள் , " அப்போஸ்தலருடைய உபதேசத்திலும் , அந்நியோந்நியத்திலும் .... உறுதி யாய்த் தரித்திருந்தார்கள் " . அவர்களுக்குப் பெரிதான கிருபையும் பெரிதான சந்தோஷமும் இருந்தது . 


நாம் கர்த்தரோடும் அவருடைய பரிசுத்தவான்களோடும் உள்ள ஐக்கியத்தைப் பேணிக் காத்துக்கொள்வோமாக . இவர்களையன்றி வேறு யாரோடாகிலும் ஐக்கியங்கொள்ள நாம் நாடுவோமாயின் , நாம் பிசாசின் கண்ணியில் விழ நேரிடும் . " உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா ? " ( யாக் . 4 : 4 ) .

Post a Comment

Previous Post Next Post