சுயநலமற்ற ஜீவியம் 


சுயநலமற்ற ஜீவியம்

“ ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து , இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள் ” ( கலா , 6 : 2 ) . 


சாது சுந்தர்சிங் ஒருமுறை இமயமலைப் பகுதியிலுள்ள ஒரு பள்ளத்தாக்கின் வழியாக ஒரு சந்நியாசியுடன் நடந்து சென்றுகொண்டி ருந்தார் . பனி பெய்துகொண்டிருந்தமையாலும் , அவர்கள் தாங்கள் சென்றடைய வேண்டிய இடத்திற்கு இருள் சூழுமுன் செல்ல வேண்டிய திருந்தமையாலும் அந்த சந்நியாசி சுந்தர்சிங்கை வேகமாக நடக்கும்படி கோரினார் . அவர்கள் இருவரும் இவ்வாறு துரிதமாகச் சென்றுகொண் டிருக்கையில் ஒரு பரிதாபகரமான அபயக்குரலைக் கேட்டனர் . அது , கீழே விழுந்து காயமடைந்திருந்த ஒரு ஏழை மனிதனிடமிருந்து வந்த அவலக் குரலாகும் . சுந்தர்சிங் அங்கு சென்று அந்த மனிதனுக்கு உதவி செய்ய விரும்பினார் . ஆனால் அவர்கள் அவனுக்கு உதவி செய்ய முனைந்தால் , இருள் கவ்வுமுன் அவர்களால் பனி பெய்திருக்கும் பகுதியைக் கடந்து செல்ல இயலாது என்று அந்த சந்நியாசி கூறினார் . அந்த மனிதன் அங்கேயே கிடந்து மரிக்கும்படியாக அவனை அப்படியே விட்டுச் செல்வதைச் சாதுவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை . ' ஒருவேளை அந்தச் சகோதரனுக்கு உதவி செய்யும்படியாகவே கர்த்தர் என்னை இவ்வழியாகக் கொண்டுவந்திருக்கக் கூடும் ' என்று எண்ணிக்கொண்டு அவர் அந்த மனிதனின் அருகில் சென்றார் . சந்நியாசி இவருக்காகக் காத்திருக்க வில்லை ; அவர் தனியாக நடந்து சென்றுவிட்டார் . குற்றுயிராய் விழுந்து கிடந்த மனிதன் நடக்க முடியாத நிலையிலிருந்ததைச் சாது கண்டார் . ஆகவே அவர் தம்முடைய துப்பட்டியினால் ஓர் தொட்டிலை உண்டாக்கி , அதில் அந்த மனிதனை வைத்து , தன் முதுகில் சுமந்துகொண்டு சென்றார் .


நடக்க முடியாத ஒரு மனிதனையும் சுமந்துகொண்டு மலையின் மேல் ஏறிச் செல்வது அவருக்கு மிகவும் கடினமானதாக இருந்தது . இருப்பினும் அவர் தொடர்ந்து களைப்புடனும் கஷ்டத்துடனும் நடந்து சென்றுகொண் டிருந்தார் . முடிவாக , சற்று தொலைவில் அவரால் ஒரு மடத்திலிருந்து வந்த வெளிச்சத்தைக் காண முடிந்தது . அந்த மனிதனைச் சுமந்துகொண்டே அவர் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கையில் , வழியில் ஒரு பெரிய மூட்டை போன்ற ஒன்று பனியினால் முழுவதுமாக மூடப்பட்டுக் கிடப்பதை அவர் காண நேர்ந்தது . அதை அவர் பார்வையிட்டபோது , தன்னுடன் ஆரம் பத்தில் நடந்து வந்துகொண்டிருந்த சந்நியாசியின் சடலம் தான் அது என்பதைக் கண்ணுற்று அவர் திகிலடைந்தார் .


சாது சுமந்துவந்த அந்த ஏழை மனிதனின் சரீரத்திலிருந்த உஷ்ணம் அவருக்குச் சூடுண்டாக்கி , அந்தச் சந்நியாசியைப் போல அவர் கடுங் குளிரில் உறைந்துபோய் மரித்துவிடாதவாறு தடுத்திருந்தது . மறுபக்கத்தில் சாது தூக்கிச் சுமந்துகொண்டு வந்த அந்த உதவியற்ற மனிதனும் சாதுவின் சரீரத்திலிருந்து உஷ்ணத்தைப் பெற்றுக்கொண்டு உயிர் பிழைத்துக் கொண்டான் .


மற்றவர்களுடைய பாரங்களைப் பகிர்ந்துகொள்ளுதல் நமக்கும் அவர்களுக்கும் புதிய ஜீவனை அளிக்கிறது என்பது எவ்வளவு உண்மை யானது !


கிறிஸ்தவ ஜீவியத்தின் அடிப்படையே சுயநலமற்ற ஒரு ஜீவியம் ஆகும் - அது மற்றவர்களுடைய பாரங்களையும் கவலைகளையும் சுமப்பது மட்டுமல்லாமல் , அவர்களுடைய பெலவீனங்களையும் அக்கிரமங்களையுங்கூட சுமக்கும் ஒரு ஜீவியம் ஆகும் . நாம் நம்முடைய ஜீவியங்களை ஒரு கணம் ஆராய்ந்து பார்த்து , நம்மைக் குறித்த கர்த்தருடைய எதிர்பார்ப்பை நாம் எந்த அளவுக்கு நிறைவேற்றியிருக்கி றோம் என்பதைக் கண்டுணர்வோமாக .


Post a Comment

Previous Post Next Post