ஆபத்தில் விடுதலை


ஆபத்தில் விடுதலை

 " ஆபத்தில் நானே அவனோடிருந்து , அவனைத் தப்புவித்து , அவனைக் கனப்படுத்துவேன் ” ( சங் . 91 : 15 ) .


 கர்த்தர் நம்மை இரு விதங்களில் விடுவிக்கிறார் : ( i ) அவர் நம்மை ஆபத்துக்கு நீங்கலாக்கித் தப்புவிக்கிறார் ( ii ) நாம் ஆபத்திலிருக்கும்போது


அவர் நம்மைத் தப்புவிக்கிறார் . இவ்விரு அனுபவங்களையும் 91 -ஆம் சங்கீதத்தில் நாம் காணலாம் . ' நிச்சயமாகவே அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்குத் தப்புவிப்பார் ' என்று இச்சங்கீதத்தின் மூன்றாம் வசனம் கூறுகிறது . உண்மையில் , கர்த்தர் நம்மை ஆபத்துக்கு நீங்கலாக்கித் தப்புவிப்பது அல்லது ஆபத்துக்கு விலக்கிப் பாதுகாப்பது குறித்தே அச்சங்கீதத்தின் முதலாம் வசனம் முதல் பதினான்காம் வசனம் வரையுள்ள அனைத்து வசனங்களும் கூறுகின்றன . ஆனால் , நாம் ஆபத்திலி ருக்கும்போது கர்த்தர் நம்மைத் தப்புவிப்பது குறித்தே அதன் பதினைந்தாம் வசனம் கூறுகிறது . “ அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான் , நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன் ; ஆபத்தில் நானே அவனோடிருந்து , அவனைத் தப்புவித்து , அவனைக் கனப்படுத்துவேன் " . 


தேவன் நம்மை ஆபத்துக்கு நீங்கலாக்கித் தப்புவிப்பதற்கும் நாம் ஆபத்தில் அகப்பட்டிருக்கும்போது அவர் நம்மைத் தப்புவிப்பதற்கும் இடையே உள்ள வித்தியாசம் யாது ? நம்முடைய ஜீவியத்தில் தேவன் ஒரு கஷ்டத்தை அல்லது சோதனையை அனுமதிக்கும்போது , அவர் நம்மை உயர்த்திக் கனப்படுத்த விரும்புகிறார் என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும் - " ஆபத்தில் நானே அவனோடிருந்து , அவனைத் தப்புவித்து , அவனைக் கனப்படுத்துவேன் ” . விடுதலையோடு கூட ஓர் ஆவிக்குரிய பதவி உயர்வும் வருகிறது . 


சாத்ராக் , மேஷாக் , ஆபேத்நேகோ ஆகியோர் அக்கினிக்கு நீங்கலாகத் தப்புவிக்கப்படாமல் , அக்கினிக்குள்ளிருந்து தப்புவிக்கப் பட்டனர் . அவர்கள் அக்கினிக்குள் தூக்கி எறியப்பட்டனர் ; அவர்கள் அக்கினிக்குள் தூக்கி எறியப்பட்ட பின்னரே , தேவன் அவர்களைத் தப்புவித்தார் ; பின்பு . " ராஜா சாத்ராக் , மேஷாக் , ஆபேத்நேகோ என்பவர் களைப் பாபிலோன் தேசத்திலே உயர்த்தினான் ” ( தானி . 3:30 ) . தேவன் தானியேலைச் சிங்கங்களின் கெபிக்கு நீங்கலாக்கித் தப்புவித்திருக்கலாம் . ஆனால் அவர் அவனை அதற்கு உள்ளே தூக்கியெறியப்படும்படி அனு மதித்துவிட்டு , அதன் பின்பு அந்த ஆபத்தில் அவனைப் பாதுகாத்துத் தப்புவித்தார் . அவன் தப்புவிக்கப்பட்ட பின் ராஜா அவனை மிகவும் அதிகமாகக் கனம்பண்ணி , தானியேலின் தேவனே எல்லாரும் சேவித்துப் பணிய வேண்டிய மெய்யான தேவன் என்று பறைசாற்றுவித்தான் . யோசேப்பு குழிக்குள்ளும் சிறைச்சாலைக்குள்ளும் தள்ளப்பட்டான் . ஆனால் பின்பு அவன் கனப்படுத்தப்பட்டு , எகிப்து தேசம் முழுமைக்கும் அதிகாரியாக உயர்த்தப்பட்டான் , மொர்தெகாய் கடுமையான கஷ்டத்துக் குள்ளாகியிருந்தான் . அவனுடைய ஜனங்களெல்லாரும் ராஜாவின் கட்டளையின்பேரில் கொல்லப்படவிருந்தனர் . ஆயினும் , தேவனோ அந்தக் கடுமையான பிரச்சினையில் அவனை விடுதலையாக்கி , அந்தப் பேரரசின் ராஜாவுக்கு அடுத்தவனாக அவனை உயர்த்தினார் .


 ஒருவேளை நீங்கள் இப்போது ஒரு கடுமையான பிரச்சினையில் இருக்கலாம் . ஆனால் திடன்கொள்ளுங்கள் . நீங்கள் சத்தியத்துக்கு உண்மையாயிருக்கிறீர்களென்பது நிரூபிக்கப்பட்ட பின் , கர்த்தர் உங்களை விடுதலையாக்கிக் கனப்படுத்துவார் .

Post a Comment

Previous Post Next Post