' நான் உன்னைத் தாங்குவேன் ' 


நான் உன்னைத் தாங்குவேன்



" என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன் " ( ஏசாயா 41 : 10 ) . 


நாம் கர்த்தரைப் பற்றிப்பிடித்துக்கொண்டிருப்பது நல்லதுதான் ; ஆயினும் கர்த்தர் நம்மைப் பற்றிப்பிடித்துக்கொண்டிருக்கிறார் என்பதை நாம் உணர்ந்துகொள்வதே அதைக் காட்டிலும் முக்கியமானதாகும் . ஒரு பிள்ளை தன் தாயைப் பற்றிப்பிடித்துக்கொண்டிருக்கக் கூடும் ; ஆனால் அதனுடைய தாய் அதனைப் பற்றிப்பிடித்துக்கொண்டிருப்பாளாயின் , அதுவே , அப்பிள்ளைக்குத் தான் இன்னும் அதிக பாதுகாப்பாக இருக் கிறது என்ற உணர்வை உண்டாக்கும் . அருமையான வாசகரே , நீர் உம் பரம பிதாவின் பிரியமான பிள்ளையாக இருக்கிறீர் . அவர் உம் கரத்தைப் பிடித்திருக்கிறார் . ஆகவே நீர் எதற்கும் பயப்பட வேண்டிய அவசிய மில்லை.


“ உன்னைத் தாங்குவேன் " - தாங்குதல் என்பது பற்றிப்பிடித்துக் கொள்ளுதலினின்று வித்தியாசமான ஒன்றாகும் . நீங்கள் ஒரு நோட்டுப் புத்தகத்தை அல்லது ஒரு பென்சிலைச் சாதாரணமாகப் பிடித்துக் கொண்டிருக்கலாம் . ஆனால் பொதுவாகப் பெலனற்றதும் , தன்னால் சுயமாக நிற்க முடியாததுமான ஒன்றையே நாம் நம்முடைய கரத்தினால் தாங்கிப்பிடித்துக்கொள்கிறோம் . அருமையானவர்களே , நாம் பெலவீன மானவர்கள் . தெய்வீக சகாயமின்றி நம்மால் நேராக நிற்க முடியாது . நாம் சுயமாக நிற்கப் பிரயாசப்படுவோமாயின் விழுந்துவிட நேரிடும் . நம் முடைய கிருபையுள்ள ஆண்டவர் நம்முடைய பெலவீனங்களை அறிந்த வராக , தமது நீதியின் வலதுகரத்தினால் நம்மைத் தாங்குவதாக வாக்களித்திருக்கிறார் .


நம்முடைய கர்த்தர் நம்மைத் தாங்கிக்கொண்டிருப்பதால் , நமக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு . ' இப்பொழுது வழுவாதபடி உங்களைக் காக்கவும் , தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் அவர் வல்லமையுள்ளவர் ' ( யூதா 24 ) . நாம் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் ! நம்மால் சுயமாக நிமிர்ந்து நிற்க முடியாதிருப்பினும் , நாம் கீழே விழுந்துவிடாதவாறு நம்முடைய கர்த்தர் நம்மைத் தாங்கிக்கொண்டிருக்கிறாரே ! அந்த மகிமையான நாளில் நாம் அவருடைய மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே நிறுத்தப்படும்படியாகவே அவர் நம்மைத் தாங்கிக்கொண்டிருக்கிறார் .

Post a Comment

Previous Post Next Post