' அவரை அமர்ந்திருக்கவிடாதிருங்கள் ' 


அவரை அமர்ந்திருக்கவிடாதிருங்கள்

“ பின்பு , அந்தத் தூதன் தூபகலசத்தை எடுத்து , அதைப் பலிபீடத்து நெருப்பினால் நிரப்பி , பூமியிலே கொட்டினான் ; உடனே சத்தங்களும் , இடிமுழக்கங்களும் , மின்னல்களும் , பூமியதிர்ச்சியும் உண்டாயின " ( வெளி . 8 : 5 ) . 


பலிபீடத்திலிருந்து எழும் அக்கினியானது , ஜெபஜீவியத்திற்காக நாம் கொண்டிருக்க வேண்டிய பரிசுத்த வைராக்கியத்தைக் குறிக்கிறது எனலாம் . பரிசுத்த அக்கினியிலிருந்து புறப்படும் ஜெபங்களுக்கு எப்பொழுதுமே அதிசயிக்கத்தக்க பலன்கள் உண்டாகின்றன . அவை நான்கு விதங்களில் வெளிப்படுத்தப்படுகின்றன . 


{ 1 } ' சத்தங்கள் ' - இவை பூமிக்குரிய சத்தங்களல்ல ; பரலோக சத்தங்கள் அல்லது பரலோக தூதுகளாகும் . பிரசங்க மேடையிலிருக்கும் பிரசங்கி மார்கள் அனலற்ற , சாரமற்ற தூதுகள் அளிக்கிறார்களெனில் , பரிசுத்த பூமியில் தங்கள் முழங்கால்களை முடக்கும் ஜெபவீரர்கள் இல்லா திருப்பதே அதற்கான ஒரு காரணமாக இருக்கக் கூடும் உன்னதமான பரிசுத்தத்திற்கான வைராக்கியங்கொண்ட ஜெபவீரர்கள் எழும்பி யுத்தத்தை அதன் வாசல் மட்டும் திருப்புவார்களாக . ' பரிசுத்தத்தின் பிரசங்கிமார்கள் ' கிடைக்கப்பெறும் பொருட்டாகத் தங்களுடைய வல்லமையான ஜெபங் களினால் கிருபாசனத்தைப் பலவந்தம் செய்யக்கூடிய பரிசுத்த புருஷர் நமக்குத் தேவை . 


{ 2 } 'இடிமுழக்கங்கள்' - இவை சத்து களின் மேல் நமக்கு கிடைக் மாபெரும் ஜெயத்தைக் குறிக்கின்றன ( 1 சாமு . 7:10 ) . சாத்தான்தான் ஜெயம்பெற்றவன் என்பது போல தோன்றுமளவிற்கு இன்று கர்த்தருடைய சபை ஏன் ஓர் உணர்ச்சியற்ற , தோற்கடிக்கப்பட்ட நிலையில் காணப்படுகிறது ? ஒரு பரிசுத்தமான , தீட்டுப்படாத ஜீவியத்துக்கென்று தங்களையே முற்றிலுமாக அர்ப்பணித்திருக்கும் ஜெப மாந்தர் போதுமான அளவு இல்லை என்பதே அதன் காரணமாகும் . தேவனுடைய பரிசுத்தத்தைக் குறித்த தெளிவான தரிசனத்தையுடைய பரிசுத்தவான்கள் எழும்புவார் களாக . கிருபாசனத்துக்கு நேராக அவர்கள் அணிவகுத்து வெற்றிநடை போடுவார்களாக . அப்படியானால் தேவன் வெகு விரைவில் பரலோகத் திலிருந்து இடிமுழக்கமிட்டு , தம்முடைய சத்துருக்களையெல்லாம் தோற் கடிப்பார் ,


{ 3 } ' மின்னல்கள் ' - இவை சாத்தானின் சேனைகள் தோற்கடிக்கப்படுவதைக் குறிக்கின்றன ( லூக்கா 10 : 18 ) . தங்களுடைய தூய்மையான ஜீவியத்தினாலும் ஜெபஜீவியத்தினாலும் அந்தகார சக்திகளைக் கீழே விழத்தள்ளும் பரிசுத்தவான்களைத் தேவன் எவ்வளவாகத் தேடிக்கொண்டிருக்கிறார் ! அருமையான பரிசுத்தவானே , தூசியை உதறிவிட்டு மரித்தோரை விட்டு எழும்பி ஜெபிப்பீராக - சாத்தான் மின்னலைப் போல் வானத்திலிருந்து விழுவதைக் காணும்வரை தொடர்ந்து ஜெபித்துக்கொண்டேயிருப்பீராக .


{ 4 } ' பூமியதிர்ச்சி ' - இது , பழுதற்ற ஜீவியம் செய்யும் ஜெப மாந்தர் மட்டுமே இவ்வுலகத்தைக் கிறிஸ்துவுக்காக அசைக்க முடியும் என்பதைக் காண்பிக்கிறது . அநேகர் ஜெபிக்கிறார்கள் ; இருப்பினும் ஏன் ஒன்றும் சம்பவிப்பதில்லை ? சிலர் ஜெபத்தில் பிசாசை அதட்டுகிறார்கள் , ஆனால் அவர்களில் மலைபோலிருக்கும் இரகசிய பாவங்களைக் கண்டு , பிசாசானவன் நகைத்து , அவர்களைப் பதிலுக்கு மறுபடியுமாக அதட்டு கிறான் . மெய்யாகவே நம்முடைய தேவன் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் . அவர் இன்னமும் ஒரு பெரிய ஆவிக்குரிய பூமியதிர்ச்சியை அனுப்பி கிறிஸ்துவுக்காக உலகத்தை அசைக்க விரும்புகிறார் . ஜான் வெஸ்லி ஒருவிசை இவ்வாறு கூறினார் : ' பாவம் செய்வதற்கு மட்டுமேயன்றி வேறெதற்கும் பயப்படாதவர்களும் , தேவனைத் தவிர வேறொன்றையும் நேசியாதவர்களுமான நூறு பேரை எனக்குத் தாருங்கள் . அவர்கள் எப்படிப்பட்ட பின்னணியிலிருந்து வந்தாலும் , அவர்களால் கிறிஸ்துவுக்காக உலகத்தை அசைக்கவும் பரலோக ராஜ்யத்தை ஸ்தாபிக்கவும் கூடும் '


நாம் ஒரு பழுதற்ற ஜீவியம் செய்வதற்குத் தேவன் தாமே நமக்கு உதவி செய்து , அதன் மூலம் நம் ஒவ்வொருவரையும் பசும்பொன்னாலான தூபகலசமாக்குவாராக . அதன் மூலம் நம்முடைய ஜெபங்கள் , பரலோக தூபத்தைப் போல , ' சத்தங்களையும் இடிமுழக்கங்களையும் மின்னல்களையும் பூமியதிர்ச்சியையும் உண்டாக்குவதாயிருக்கும் ' ,

Post a Comment

Previous Post Next Post