' சிறியவையே ' காரணமாகின்றன !


' சிறியவையே ' காரணமாகின்றன !

 " செத்த ஈக்கள் தைலக்காரனுடைய பரிமளதைலத்தை நாறிக் கெட்டுப்போகப்பண்ணும் ” ( பிர , 10 : 1 ) ,


நாம் அநேகமாகச் சிறிய தவறுகளை ' இவை சிறியவை தானே ! ' என்று கண்சாடையாக விட்டுவிடும் இயல்புள்ளவர்களாயிருக்கிறோம் . ஆனால் நம் ஜீவியத்தில் இப்படிப்பட்ட ' சிறிய ' காரியங்களே அடிக்கடி நாசத்தை உண்டுபண்ணிவிடுகின்றன . அப்படிப்பட்ட பல எடுத்துக் காட்டுகளை வேதாகமம் முழுவதிலும் நாம் காணலாம் .


" ராஜாக்கள் யுத்தத்திற்குப் புறப்படுங்காலம் வந்தபோது " . தாவீது தன்னுடைய படுக்கையறையிலே சற்று சுகமாக இளைப்பாறினான் . அவனுடைய அந்தச் சற்றுநேர இளைப்பாறுதல் , அருவருக்கப்படத்தக்க விபசாரத்திலும் , தன்னுடைய உத்தமமான போர்ச்சேவகனைக் கொடிய வஞ்சக முறையில் படுகொலை செய்வதிலும் முடிவுற்றது . கேயாசியின் கொஞ்சம் பேராசை அவனை அவனுடைய ஜீவியகாலமெல்லாம் ஒரு குஷ்டரோகியாக மாற்றிவிட்டது ! வெறும் முப்பது வெள்ளிக்காசுகளின் பேரில் யூதாஸ்காரியோத்துக்கு இருந்த கொஞ்சம் ஆசை , அவனை நம்முடைய கர்த்தரையே காட்டிக்கொடுத்த துரோகியாக்கிவிட்டது ! பண ஆசையைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள் . ' சிறிய ' பாவங்களால் கொல்லப்பட்டிருக்கும் மிகப் பெரிய ஆவிக்குரிய பராக்கிரமசாலிகள் எத்தனைபேர் ! ஒரு பெரிய கொம்பு அல்ல , ஒரு ' சின்ன கொம்பே ' , ' வானத்தின் சேனையாகிய நட்சத்திரங்களில் சிலவற்றைப் பூமியிலே விழப்பண்ணி , அவைகளை மிதித்தது ' ( தானி 7 : 8 : 8 : 9 , 10 ) .


சிறியவையாகவும் தீங்கற்றவை போலவும் தோன்றும் காரியங் களை முளையிலேயே கிள்ளி எறிந்துவிடுவதற்கு நாம் அசதியாயிருக் கிறோமல்லவா ? இது , நம்முடைய தூய ஜீவியத்தை அழிப்பதற்கும் அசுசிப்படுத்துவதற்கும் சாத்தான் உபயோகிக்கும் தந்திரங்களில் ஒன்றாகும் .


பேதுரு ஆண்டவரை மறுதலிக்கத் திட்டமிட்டிருக்கவில்லை . ஆனால் கர்த்தராகிய இயேசு காட்டிக்கொடுக்கப்பட்ட அந்தக் குளிரான இரவில் , அவன் தன் அருகில் குளிர்காயும்படி மூட்டப்பட்டிருந்த நெருப் பில் தனக்குக் கொஞ்சம் அனல் உண்டாக்கிக்கொள்ளவே விரும்பினான் . பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்கார்ந்து சற்று அனல்கொண்டது முடிவில் அவனுடைய ஜீவியத்தையே கசப்பாக்கிற்று அவன் மனங்கசந்து அழுதான் . பேதுரு மறுதலித்தது நம் ஒவ்வொருவருக்கும் ஓர் எச்சரிப்பாகச் சரித்திரத்தில் இடம்பெற்றுவிட்டது . கர்த்தரை மறுதலிக்கும் கிரயத்தைச் செலுத்தி சரீரத்தில் சற்று அனலடைவதைப் பார்க்கிலும் , குளிரினால் மரிப்பதே நலம் ,


நமக்குக் கிடைக்கும் கொஞ்சம் நேரமோ அல்லது பணமோ அல்லது நம் வசமிருக்கும் வேறெந்தப் பொருளோ . எதுவாயிருப்பினும் - மிகச் சிறிய காரியங்களைக் குறித்துங்கூட நாம் மிகவும் கவனமாயிருக்க வேண்டுமென்று கர்த்தர் நம்மைக் குறித்து விரும்புகிறார் . மிகக் கொஞ்சத்தில் நாம் உண்மையாயிராத பட்சத்தில் , அநேகத்தில் நம்மால் உண்மையாயிருக்க முடியாது .


 எட்டு மில்லியன் டாலர் செலவில் உண்டாக்கப்பட்ட ராக்கெட் ஒன்று , அதன் செயல்முறைத் திட்டம் ( computer programme) அடங்கிய படிவத்தில் இரு வார்த்தைகளுக்கு இடையே வர வேண்டிய ஒரு இணைப்புக்குறி ( a hyphen ) தவறுதலாக வேறொரு இடத்தில் வைக்கப் பட்டதினிமித்தமாகப் பெருஞ்சேதத்திற்குள்ளாகி நாசமடைந்ததாகச் சில நாட்களுக்கு முன் ஓர் அறிக்கை வெளிவந்துள்ளது . ஒரு முறை ஒரு விமான இயந்திரப் பொறியாளர் திருகு ஆணி ஒன்றைப் பொருத்த மறந்ததால் , ஒரு விமானம் விழுந்து நொறுங்கி , அதன் விமானி உட்பட அதில் பணிபுரிந்தவர்கள் அனைவரும் , அதிலிருந்த அனைத்து பயணிகளும் மாண்டனர் . ஒரு கோப்பை தேநீர் அருந்திவிட்டு பின்னர் அத்திருகாணியைப் பொருத்திவிடலாம் என்று நினைத்திருந்த அவர் பின்பு அதை அறவே மறந்துவிட்டார் . புறத்தோற்றத்தின்படி அது ஒரு மிகச் சிறிய வேலையாயிருந்தபோதிலும் - அந்த ஆணியின் விலை ஒரு டாலருக்கும் குறைவானதாக இருந்தபோதிலும் - பல உயிர்களும் , எத்தனையோ மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள விமானமும் நாசமடை வதற்கு அந்நபருடைய சிறிய கவலையீனம் போதுமானதாகிவிட்டது ! 


' மிகச் சிறிய நாணயம் ஒன்று கண்ணுக்கு மிக அருகாமையில் வைக்கப்படுமாயின் , அது சூரியனையே மறைத்துவிடும் ' .


Post a Comment

Previous Post Next Post