" கிறிஸ்துவண்டை வாருங்கள் " 



கிறிஸ்துவண்டை வாருங்கள்


நீ கொப்பேர் மரத்தால் உனக்கு ஒரு பேழையை உண்டாக்கு ; ... அதை உள்ளும் புறம்புமாகக் கீல்பூசு .... பேழையின் கதவை அதின் பக்கத்தில் வை " ( ஆதி . 6 : 14 - 16 ) .


பேழை கிறிஸ்துவுக்கு அடையாளமாயிருக்கிறது . அது மரத்தினால் ( மனுஷீகம் ) செய்யப்பட்டதாயிருந்தபோதிலும் , அதனுள் தண்ணீர் புகாத வாறு கீலானது ( தெய்வீகம் ) அதை உள்ளும் புறம்புமாக மூடியிருந்தது . கர்த்தராகிய இயேசு தம்முடைய சுபாவத்தில் முற்றிலும் தெய்வீகமான வராயிருப்பினும் , அவர் இப்பூமிக்கு வந்தபோது ஒரு மாம்ச சரீரத்திற்கு இருக்கக்கூடிய சகல பெலவீனங்களும் உள்ளவராய் , மாம்ச சரீரத்தின் வரம்புகளுக்கு உட்பட்டவராய் , மனுஷீகத் தன்மையுள்ளவராய் இருந்தார் . அவர் மாம்சமும் இரத்தமும் உடையவராய் இவ்வுலகில் ஜீவித்து . ஒரு பாவமற்ற ஜீவியம் , ஒரு ஜெய ஜீவியம் செய்வது சாத்தியமானது என்பதை நமக்குக் காண்பித்திருக்கிறார் ; ஜீவியத்தில் வீசக்கூடிய புயற்காற்றுகளுக்கு அப்பாற்பட்ட மேலானதொரு ஜீவியத்தை நம்மால் செய்யக் கூடும் என்பதை அவர் நமக்குக் காண்பித்திருக்கிறார் .


ஜலப்பிரளயம் உண்டானபோது பேழைக்குள் இருந்தவர்கள் மட்டும் தண்ணீரில் அமிழ்ந்துபோகவில்லை . நாம் சுயமாக இந்த ஜீவியத்தைச் செய்ய முடியாது , நாம் கிறிஸ்துவிடம் செல்ல வேண்டும் , நாம் அவரில் நிலைத்திருக்க வேண்டும் . நாம் அவரால் பாதுகாக்கப்பட வேண்டும் . “ என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது ” ( யோவான் 15 : 5 ) என்று அவர் கூறுகிறார் ஆம் , அவரின்றி நாம் கைவிடப்பட்டவர்களும் விழுந்துபோனவர்களுமாயிருப்போம் . ஆனால் நாம் அவருக்குள் காணப்படுவோமாயின் , ' கிறிஸ்துவுடனேகூட தேவ னுக்குள் மறைந்திருப்போமாயின் ' , ஜீவியத்தில் நாம் சந்திக்கக்கூடிய கொந்தளிக்கும் தண்ணீர்கள் போன்ற சோதனைகளில் அமிழ்ந்துபோகாமல் , அவற்றின் மேல் மிதக்கக்கூடியவர்களாய் இருப்போம் ; அவர் வெளிப்படும் போது , நாமும் மகிமையிலே அவரோடுகூட வெளிப்படுவோம் .

பேழைக்கு ஒரே ஒரு கதவு மட்டுமே இருந்தது . நாம் கிறிஸ்துவிடம் செல்வதற்கு நமக்கு ஒரே ஒரு வழி மட்டுமே உண்டு . அது நெருக்கமான வழி - அது சிலரால் மட்டுமே தெரிந்துகொள்ளப்படுவதாகும் ( மத் . 7 : 14 ) . நீங்கள் ஜனத்திரளோடு சேர்ந்துபோக விரும்பி , உலகத்தையும் உலகத் திலுள்ளவர்களையும் பிரியப்படுத்த வேண்டுமென்று எண்ணுவீர் களென்றால் , உங்களால் கிறிஸ்துவிடம் வர முடியாது . கிறிஸ்துவிடம் நம்மை நடத்தக்கூடிய வழி , பெரும்பாதையான பரிசுத்த வழி என்று அழைக்கப்படுகிறது ( ஏசாயா 35 : 8 ) . கிறிஸ்துவிடம் நீங்கள் வர வேண்டு மாயின் , பாவம் , அசுத்தம் என்று தோன்றுகிற ஒவ்வொரு காரியத்தையும் விட்டு உங்களை நீங்கள் வேறுபிரித்துக்கொள்ள வேண்டியது இன்றி யமையாததாகும் .


Post a Comment

Previous Post Next Post