" அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள் ” (ஏசாயா 55 : 6 ) . 


' அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுதல் ' என்பது , அவர் நம்மோடு பேசும்போது அவருடைய வார்த்தைக்குச் செவிகொடுத்து , அவருடைய ஆலோசனைப்படியே நம்முடைய ஜீவியத்தைத் திருத்தி அமைத்துக்கொள்ளுதல் ஆகும் . கலக்கங்களும் சோதனைகளும் நிறைந்த வேளைகளில் நாம் தேவனோடு நெருங்கி ஜீவிப்போமாயின் , சங்கீதக்காரனோடு சேர்ந்து நாமும் ' தேவன் எனக்கு அடைக்கலமும் பெலனும் , ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையு மானவர் ' என்று தைரியமாகச் சாட்சி கூற முடியும் .

“ நம்முடைய தேவனாகிய கர்த்தரை நாம் தொழுதுகொள்ளுகிற போதெல்லாம் , அவர் நமக்குச் சமீபமாயிருக்கிறதுபோல , தேவனை இவ்வளவு சமீபமாய்ப் பெற்றிருக்கிற வேறே பெரிய ஜாதி எது ? ” ( உபா , 4 ; 7 ) இன்று நீங்கள் தேவனை விட்டு வெகுதூரத்தில் ஜீவிப்பீர்களென்றால் , அவ ருடைய சமுகத்தினின்று தூரமாக இருப்பீர்களென்றால் , அவருடைய அன்புக்குத் தூரமாக இருப்பீர்களென்றால் , அவருடைய கிருபைக்குத் தூரமாக இருப்பீர்களென்றால் , அவருடைய வல்லமைக்குத் தூரமாக இருப்பீர்களென்றால் , அவருடைய நன்மைக்குத் தூரமாக இருப்பீர்களென் றால் , நீங்கள் ஒரு சோதனையை அல்லது கஷ்டத்தைச் சந்திக்கும்போது தேவன் உங்களை விட்டுத் தூரமாக இருப்பதாக உணருவீர்கள் .


POEM :

' அமைதியான இளைப்பாறும் இடம் ஒன்றுண்டு ;
அது தேவனுடைய உள்ளத்துக்கு அருகில் இருக்கிறது .

பாவம் தொந்தரவு செய்யாத இடம் ஒன்றுண்டு ;
அது தேவனுடைய உள்ளத்துக்கு அருகில் இருக்கிறது .

இனிமையான ஆறுதலளிக்கும் இடம் ஒன்றுண்டு ;
அது தேவனுடைய உள்ளத்துக்கு அருகில் இருக்கிறது .

நாம் நம்முடைய இரட்சகரைச் சந்திக்கும் இடம் ஒன்றுண்டு ;
அது தேவனுடைய உள்ளத்துக்கு அருகில் இருக்கிறது .

நாம் முற்றிலும் விடுதலை பெற்றவர்களாயிருக்கும் இடம் ஒன்றுண்டு ;
 அது தேவனுடைய உள்ளத்துக்கு அருகில் இருக்கிறது .

எங்கும் மகிழ்ச்சியும் சமாதானமும் நிறைந்திருக்கும் இடம் ஒன்றுண்டு ;
அது தேவனுடைய உள்ளத்துக்கு அருகில் இருக்கிறது ' ,


உங்களுடைய இருதயம் தேவனை விட்டுத் தூரமாக இருக்கும் போது உங்களுக்குத் திருப்தியோ , இளைப்பாறுதலோ இராது ; உங்க ளுடைய ஜீவியம் கசப்பாகவும் , வெறுமையாகவும் , இருளாகவும் , அசுத்த மாகவும் . வறண்டதாகவும் இருக்கும் .

நம்முடைய துன்ப வேளைகளில் நம் தேவனை நமக்கு மிக அருகாமையிலிருக்கும் ஏற்ற துணையாக அனுபவிக்கும் மகிழ்ச்சியை நாம் கொண்டிருக்கத்தக்கதாக , நாம் அவருக்கு மிக அருகில் ஜீவிக்கும்படி அவர் தாமே நமக்கு உதவி செய்வாராக


Post a Comment

Previous Post Next Post